என் மலர்
செய்திகள்

வடமதுரை அருகே மின்மோட்டார்களை திருடிய மர்ம கும்பல்
வடமதுரை:
வடமதுரையில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று இங்கு புகுந்த மர்மகும்பல் மின்மோட்டார். ஸ்டாட்டர் பாக்ஸ் மற்றும் உதிரி பாகங்களை திருடிச்சென்றனர். காலையில் தோட்டத்திற்கு வந்த ஸ்ரீதர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல் எரியோடு குரும்பபட்டி பகுதியில் மணிவண்ணமூர்த்தி, தண்டபாணி, ஒட்டுக்கானி ஆகியோர் தோட்டங்களிலும் மர்மந பர்கள் மின்மோட்டார்கள் மற்றும் உதிரிபாகங்களை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சந்தை கூடும் சமயங்களில் அதிகளவு மோட்டார் சைக்கிள்கள் திருடுபோயின. இவ்வாறு உலாவிவரும் மர்மகும்பலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் பெண்களை குறிவைத்து செயின்பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு மர்மகும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.