search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ந்து குறைந்து வரும் பெரியாறு- வைகை அணை நீர்மட்டம்
    X

    தொடர்ந்து குறைந்து வரும் பெரியாறு- வைகை அணை நீர்மட்டம்

    முல்லை பெரியாறு, வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லையில் உள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பிற பகுதிகளில் வெளுத்து வாங்கிய போதும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் போதிய அளவு பெய்யவில்லை.

    நீர்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தபோதும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் பெரியாறு அணை நீர்மட்டம் 127 அடியை தாண்டவில்லை. தற்போது அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது. 544 கனஅடி நீர் வருகிறது. 1000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.12 அடியாக உள்ளது. 864 கனஅடிநீர் வருகிறது. பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 960 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 36.35 அடியாக உள்ளது. 2 கனஅடி நீர்வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 97.74 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 30 அடிநீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 0.4, கூடலூர் 1.5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் சாரல்மழை பெய்து வருகிறது. கனமழை பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    Next Story
    ×