என் மலர்
செய்திகள்

மதுரையில் ஆசிரியை வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை
மதுரை:
மதுரை நரிமேடு பிரசாத் தெருவைச் சேர்ந்தவர் சிரில் எட்வின். இவரது மனைவி சாராபுனித ஆனந்தி (வயது45). இவர் மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று சாரா புனித ஆனந்தி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லுக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.
மதுரை மேலபொன்ன கரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி குழந்தை தெரசா (73). இவர் சம்பவத்தன்று வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் முகவரி கேட்பது போல் குழந்தை தெரசா விடம் பேசி உள்ளனர்.
திடீரென்று மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர்.