என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் சாவு: உறவினர்கள் திடீர் முற்றுகை
அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் இறந்ததால் உறவினர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி என நேற்று அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சீர்காழி தாலுகா வாடி கிராமம் சேர்ந்த ஜெயசங்கர் மனைவி சுபா(25) வை சேர்த்தனர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இறந்த சுபாவுக்கு 1 பெண் குழந்தை உள்ளது. தற்பொழுது கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில் இறந்த சுபாவின் உடலை காலையில் இருந்து மருத்துவமனையில் தராததால் உறவினர்கள் ஆத்திர மடைந்து சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல்அறிந்து மயிலாடுதுறை காவல்துறை இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சுபாவின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் சுபா திருமணம் ஆகி 4ஆண்டுகள் ஆனதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு பின் உடல் வழங்கப்படும் என தெரிவித்ததை அடுத்து கூட்டம் கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story






