என் மலர்

  செய்திகள்

  டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் அரசு ஊழியர்களை தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர்
  X

  டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் அரசு ஊழியர்களை தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் அரசு ஊழியர்களை தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  சேலம்:

  சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீடுகளுக்குள் சென்று கலெக்டர் சமையலறை, குளியறை மற்றும் பிற தேவைகளுக்காக தண்ணீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார்.

  இப்பகுதியில் அதிகளவில் நெசவாளர்கள் வசித்து வருகிறார்கள். எனவே நெசவு தொழிலுக்கு பயன்படுத்தும் ஜரிகை பொருட்களை ஊற வைக்கும் பாத்திரங்களை தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும் எனவும், நெசவாளர் நெசவு தொழிலையும் வீட்டிற்குள்ளேயே மேற்கொண்டு வருவதால் அதிக முக்கியத்துவம் அளித்து, சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.


  சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள், குடிநீரை சேகரிக்க பயன்படுத்தும் டிரம்கள் உள்ளிட்டவைகளை தினந்தோறும் சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். மாநகராட்சி சுகாதாரத் துறையினர் குளிர் சாதனப்பெட்டி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட வைகளை தினந்தோறும் சுத்தப்படுத்துவதற்கு நினைவூட்டும் வகையில், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஒட்டு வில்லைகளை வீட்டிற்குள் ஒட்டிட வேண்டும். இது வீடுகளை சுத்தமாக பராமரிப்பதற்கு நினைவூட்டும் வகையில் அமைந்திடும்.

  டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுத்திடும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் மாநகர நல அலுவலர் மூலம் காவல் துறைக்கு தெரிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.


  எனவே பொதுமக்கள் அனைவரும் டெங்கு தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, சுகாதார மேம்பாட்டு பணிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் காமராஜ், உதவி ஆணையாளர் ஜெயராஜ், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் சிபிசக்கரவர்த்தி, சுகாதார அலுவலர் மாணிக்க வாசகம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×