என் மலர்
செய்திகள்

ஆசனூர் அருகே அரசு பள்ளியில் லேப்-டாப் திருட்டு
ஆசனூர் அருகே அரசு பள்ளியில் லேப்-டாப் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கேர் மாளம் மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக கோமதி என்பவர் பணியாற்றி வருகிறார். மாணவர்களின் கற்றல் செயல்பாட்டிற்காக 3 கம்ப்யூட்டர்கள் பீரோவில் 5 லேப்டாப்கள் இருந்துள்ளது.
கடந்த 4-ந் தேதி வழக்கம் போல் பள்ளியை திறந்து பார்த்த போது கம்ப்யூட்டர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் இருந்து 2 லேப்டாப்கள் திருட்டு போனது தெரிய வந்தது.
இது குறித்து ஆசனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து ஆசனூர் போலீசாரிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது பேசும் போதே இணைப்பை துண்டித்தனர்.
Next Story






