என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன விதிமுறைகளை மீறிய 522 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    வாகன விதிமுறைகளை மீறிய 522 பேர் மீது வழக்குப்பதிவு

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்தவர்கள் உள்பட வாகன விதிமுறைகளை மீறிய 522 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

    மேலும் வாகன விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் அவர்களிடம் எடுத்து கூறினர். மேலும் தொடர்ச்சியாக வாகன விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். 
    Next Story
    ×