என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே மில்லில் தீ விபத்து: வடமாநில தொழிலாளி கருகி பலி
    X

    கோபி அருகே மில்லில் தீ விபத்து: வடமாநில தொழிலாளி கருகி பலி

    கோபி அருகே மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தொழிலாளி கருகி இறந்தார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம் பாளையத்தில் தேங்காய் தொட்டி எரிக்கும் மில் ஒன்று உள்ளது. இந்த மில்லில் வேலை பார்த்து வந்தவர் பீமாதேவ் (வயது 48). பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். மில்லில் இவர் பணிபுரிந்த போது அங்குள்ள ஒரு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

    அதை அவர் சரி செய்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீப்பொறி பல இடங்களில் சிதறி விழுந்தது. இதில் பீமாதேவ் உடலிலும் தீ பிடித்து எரிந்தது.

    உடலில் பற்றி எரிந்த தீயுடன் அவர் அலறினார். அவரது அபாய குரலை கேட்டதும் சக தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்தனர். அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து உடனடியாக கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பீமாதேவ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×