search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு
    X

    பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு

    பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஹேமலதா (வயது 45). இவர் கணக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

    அதிர்ச்சியடைந்த ஹேமலதா வீட்டில் உள்ள அறைக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்பல் உள்பட 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து ஹேமலதா மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி சுகந்த லட்சுமி ( வயது 41). இவர் தொட்டிப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பள்ளி முடிந்ததும் தனது மொபட்டில் வீட்டுக்கு சென்றார். மொபட் முத்துக்கவுண்டன்புதூர்- சோமனூர் ரோட்டில் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென தடுத்து நிறுத்தினர்.

    இதில் நிலைதடுமாறி அவர் மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் சுகந்த லட்சுமியின் அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்தார்.

    பின்னர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த சுகந்த லட்சுமி இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×