என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
    X

    அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

    அரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வராசு வரவேற்று பேசினார்.

    அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். மாவட்ட துணை செயலாளர் தங்க.பிச்சமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், தலைமை கழக பேச்சாளர்கள் நூர்ஜகான், பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், இலக்கிய அணி செயலாளர் அறிவு என்கிற சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
    Next Story
    ×