என் மலர்

  செய்திகள்

  வடமதுரை அருகே தையல் கடை உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
  X

  வடமதுரை அருகே தையல் கடை உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடமதுரை அருகே தையல் கடை உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

  வடமதுரை:

  வடமதுரை அண்ணா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது60). இவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அருகே தையல் கடை வைத்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், பாலமுருகன், ராஜேஷ்குமார் ஆகிய மகன்களும் உள்ளனர்.

  ராஜேஷ்குமார் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். மகனை பார்ப்பதற்காக செல்வராஜ் தனது மனைவியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று விட்டார். நேற்று வீட்டிற்கு வந்தபோது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

  உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 8½ பவுன் தங்க நகைகளும், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பணமும் கொள்ளை போயிருந்தது. இது குறித்து வடமதுரை போலீசாருக்கு செல்வராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

  மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்களை பதிவு செய்தனர்.

  Next Story
  ×