என் மலர்
செய்திகள்

நீட்தேர்வில், விலக்கு கோரி இ.கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் மற்றும் நகரசெயலாளர் முத்துவேல் தலைமையில் பேரணியாக வந்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலையில் படுத்தும் கண்டனஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழுவை அமைத்திட வேண்டும், விவசாயிகளின் பயிர்கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி சட்டத்தினை மறு பரிசீலனை செய்ய வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும். செம்மொழி ஆய்வு மையத்தை சீரழிக்க கூடாது, விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்திட வேண்டும், பட்டுக்கோட்டை - தஞ்சை - அரியலூர் மற்றும் கும்பகோணம் - ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் ரெயில் திட்டத்தினை உடனே நடைமுறைபடுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தினை உடனே கைவிட வேண்டும். நீட் நுழைவு தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.