என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே அரசு பஸ் வாய்க்கால் பள்ளத்தில் இறங்கியது: பயணிகள் காயம் இன்றி தப்பினர்
சீர்காழி அருகே அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியது. இதில் பயணிகள் காயம் இன்றி தப்பினர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரத்திற்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் அட்டக்குளம் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் அருகில் இருந்த வாய்க்கால் பள்ளத்தில் இறங்கியது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காயம் இன்றி தப்பினார்கள். பின்னர் அவர்கள் மாற்று பஸ் மூலம் சிதம்பரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story






