என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வெள்ளிச்சந்தை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
By
மாலை மலர்20 Jun 2017 12:54 PM GMT (Updated: 20 Jun 2017 12:54 PM GMT)

வெள்ளிச்சந்தை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணவாளக்குறிச்சி:
வெள்ளிச்சந்தை சந்திப்பு அருகே ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பள்ளிக்கூடம், வழிபாட்டு தலங்கள் இருப்பதால் பொதுமக்கள், பெண்கள், மாணவிகளுக்கு இந்த டாஸ்மாக் மதுக்கடையால் இடையூறு ஏற்பட்டு வந்தது. எனவே இந்த மதுக்கடையை உடனே அகற்றக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியினரும் அந்த பகுதி பொதுமக்களும், கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனாலும் இந்த மதுக்கடை அகற்றப்படாததால் இன்று அந்த பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் மதுக்கடையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் ஜாண் விக்டர் தாஸ், இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் டேனியல் ஈஸ்வரதாஸ், துணைத் தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் முகம்மது ஹைதர், மாவட்ட செயலாளர் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைப்போல அஞ்சு கிராமம் சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இது வரை அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதனை கண்டித்து இன்று அப்பகுதி பாரதிய ஜனதா கட்சியினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அஞ்சுகிராமம் சந்திப்பில் நடந்த இப்போராட்டத்திற்கு கட்சியின் மண்டல தலைவரும், அஞ்சுகிராமம் பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான ராஜலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விசு, சுசீந்திரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், வக்கீல் அருள்சிவா, மண்டல பொறுப்பாளர் ராஜபிரகாஷம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் கோட்ட பொறுப்பாளர் வேல் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ரெத்தினசாமி, மாசான முத்து, சுரேஷ் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதனை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி முடித்து வைக்கிறார். போராட்டத்தையொட்டி அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story
×