என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
    X

    புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலக தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலக தாக்குதலைக் கண்டித்தும், இதில் தொடர்புடைய மர்ம நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கட்சி சாரபில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், வர்த்தகத்திற்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் புதுக்கோட்டை கீழராஜவீதி சாலையை நகராட்சி சாலையாக மாற்றம் செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  கட்சியின் நகரக்குழு உறுப்பினர் சண்முக பழனியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்பு ரையாற்றினார்.

    கோரிக்கைகளை விளக்கி நகரச் செயலாளர் சி.அன்பு மணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஜியாவு தீன், டி.சலோமி, துரை.நாராயணன், ஆர்.நிரஞ்சனா, சி.அடைக்கலாமி, நகரக்குழு உறுப்பினர்கள்  ஏ.முத்தையா, ஆர்.சோலையப்பன், எம்.கணேஷ், எம்.கோவிந்தராஜன், எம்.சித்ரா. டி.நடராஜன், பழ.குமரேசன் உள்ளிட்டோர் பேசினர்.
    Next Story
    ×