என் மலர்
செய்திகள்

வேளச்சேரியில் வாலிபர் குத்திக்கொலை
வேளச்சேரியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர்:
பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்சன்னியாசி (வயது 24). நேற்று மாலை அவர் வேளச்சேரி மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது மர்ம கும்பல் அவரை சுற்றிவளைத்து இரும்பு கம்பி, கத்தி, அரிவாளால் சரமாரியாக தாக்கினர். அதிர்ச்சி அடைந்த பொன்சன்னியாசி உயிர் தப்பிப்பதற்காக ஓட்டம் பிடித்தார். அவர் அருகில் உள்ள கடைக்குள் புகுந்தார். ஆனாலும் விரட்டி வந்த கொலைவெறி கும்பல் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் 3 கடைகளை அடித்து நொறுக்கினர்.
இதைத் தொடர்ந்து அருகில் உள்ள சுடுகாட்டுக்குள் தப்பி ஓடிய பொன்சன்னியாசியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர் பரிதாபமாக இறந் தார். கொலையுண்ட பொன்சன்னியாசி மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. எனவே முன்விரோதத்தில் மர்ம நபர்கள் அவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story