என் மலர்
செய்திகள்

டி.என்.பாளையம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர், பெரிய கொடிவேரி மதுரை வீரன் கோயில் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70).
பொன்னுசாமிக்கு எலும்பு தேய்மானம் ஏற்பட்டு தோல் பட்டை வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். எனினும் தோல்வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொன்னுசாமி கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்ததாராம். இந்நிலையில் சம்பவத்தன்று தற்கொலை முடிவெடுத்து பொன்னுசாமி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து வாந்தி எடுத்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






