என் மலர்
செய்திகள்

சிவகங்கை அருகே விபத்து: அரசு ஊழியர்கள் 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் ராஜ சேகரன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). இவர் பாகனேரியில் உள்ள அரசு வேளாண் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இதே அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் முத்துமணி (59). இவர் கிருஷ்ணன் வீட்டின் அருகில் வசித்து வந்தார்.
நேற்று இரவு கிருஷ்ணனும், முத்துமணியும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். ஒக்கூர் அருகே வந்து கொண்டு இருந்த போது எதிரே வந்த கார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த முத்துமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கிருஷ்ணனை அப்பகுதியினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே கிருஷ்ணன் இறந்தார்.
விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் டி.புதூரை சேர்ந்த சுந்தரபாண்டியனை தேடி வருகிறார்.

Next Story