என் மலர்
செய்திகள்

அரியலூர் அருகே தொழில் அதிபர் வீட்டில் 4 லட்சம் பணம் -நகை கொள்ளை
அரியலூர் அருகே தொழில் அதிபர் வீட்டில் 4 லட்சம் பணம், 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் ராஜீவ் நகரில் கலையரசன் (வயது 38). டிராக்டர் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் அரியலூர் கே.கே. நகரில் உள்ள ஒரு அபார்ட் மெண்டில் வசித்து வருகிறார். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தாருடன் தனது சொந்த ஊரான வேப்பூரில் தங்கிக் கொண்டு தினமும் கடைக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கே.கே.நகரில் உள்ள அபார்ட் மென்டில் இருந்த கலையரசனின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அக்கம் பக்கத்தினர் இது குறித்து கலையரசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீட்டுற்கு வந்த கலையரசன் வீட்டினுள் உள்ள பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4 லட்சம் பணம், 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு அரிய லூர் டி.எஸ்.பி. மோகன் தாஸ் திருட்டு நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
இதனையடுத்து கொள்ளையர்களின் அடையாளங்கள் சேகரிக்கப்படும் வகையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் எடுக்கவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அதே தெருவில் புனிதவதி, மணிமாறன் ஆகிய இருவரின் வீட்டு பூட்டுகளும் உடைக்கப்பட்டுள்ளது. அந்த இரு வீடுகளிலும் எதுவும் கிடைக்காமல் கடைசியாக கலையரசன் வீட்டில் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக் கலாம் எனக் கூறப்படுகிறது.

Next Story