என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பு.புளியம்பட்டி அருகே தோட்டத்தில் புகுந்து 200 வாழைகளை கபாளீகரம் செய்த ஒற்றை யானை
Byமாலை மலர்4 May 2017 5:18 PM IST (Updated: 4 May 2017 5:18 PM IST)
புஞ்சை புளியம்பட்டி அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை ஒன்று 200 வாழைகளை மிதித்தும் தின்றும் நாசப்படுத்தியது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
புஞ்சை புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப் பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகிறது. தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகிறது.
பவானிசாகர் அணையும் வறண்டு போய் விட்டதால் எங்கேயாவது சிறிதாவது தண்ணீர் இருக்காதா? என யானைகள் பட்டாளம் பவானிசாகர் அணைக்குள் சுற்றி திரிகிறது.
இதில் ஒரு யானை புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நால்ரோடு பகுதிக்கு நுழைந்தது. அங்கு செல்வம் என்பவரது வாழை தோட்டத்துக்குள் அந்த ஒற்றை யானை புகுந்தது.
தோட்டத்தில் உள்ள 200 வாழைகளை அந்த யானை மிதித்தும் தின்றும் நாசப்படுத்தியது. பிறகு அந்த யானை அதிகாலையில் அங்கிருந்து காட்டுக்குள் நுழைந்தது.
இன்று தோட்டத்துக்கு வந்த விவசாயி செல்வம் 200-க்கும் மேற்பட்ட வாழைகள் உருக்குலைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். செய்வதறியாது திகைத்தார். இது குறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தற்போது மீண்டும் யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் மிகவும் வேதனையுடன் உள்ளனர்.
“யானைகளை ஊருக்குள் விடாமல் தடுக்க வேண்டும். யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என விவசாயிகள் கேட்டுள்ளனர்.

Next Story
×