என் மலர்

  செய்திகள்

  தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4ஆண்டுகள் நீடிக்கும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
  X

  தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4ஆண்டுகள் நீடிக்கும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
  பழனி:

  பழனியில் ஆவின் பாலகம் திறப்பு விழா நடந்தது. பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதனை திறந்து வைத்து பேசினார்.அவர் பேசியதாவது:-

  அ.தி.மு.க அரசு செயல்படாத நிலையில் இருப்பதாகவும், நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி கடை அடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

  ஆனால் அன்றைய தினம் தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்றது. எதிர்க்கட்சியினர் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் அது நடக்காது, வழக்குகளை காட்டி பணிய வைக்கலாம் என நினைக்கிறார்கள் அது முடியாது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டு காலம் நீடிக்கும்.


  இவ்வாறு அவர் பேசினார்.

  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் தொண்டர்களின் முழு ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது, கொடநாட்டில் நடைபெற்ற கொலைச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆதலால் அதுகுறித்து இங்கு விளக்கம் அளிக்க முடியாது என்றார்.

  அப்போது நிருபர்கள் பள்ளி குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்டனர், அதற்கு அவர் பள்ளிக்குழந்தைகளுக்கு பால் வழங்கினால் அரசு திவால் ஆகிவிடும் என்று தெரிவித்தார்.
  Next Story
  ×