search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே அமையும் 17-வது வனவிலங்கு சரணாலயம்- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
    X

    (கோப்பு படம்)

    ஓசூர் அருகே அமையும் 17-வது வனவிலங்கு சரணாலயம்- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

    • அஞ்செட்டி, ஜவள கிரி, ஊரிகரம் சரகங்களை உள்ளடக்கி இந்த சரணாலயம் அமைகிறது.
    • மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும்.

    ஓசூர் அருகே 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் என்று அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அஞ்செட்டி, ஜவள கிரி, ஊரிகரம் சரகங்களை உள்ளடக்கி இந்த சரணாலயம் அமைகிறது. காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்ச்சியாக அமைய உள்ள காவிரி தெற்கு சரணாலயம் தமிழகத்தின் 17வது வன விலங்கு சரணாலயமாகும்.

    இது குறித்து முதமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகத்தைத் தமிழ்நாட்டின் 17வது காட்டுயிர்க் காப்பகமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TN Green Climate Company) செயல்படுத்தி வரும் பசுமை இயக்கங்களின் செயல்பாடுகளோடு இந்த முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×