search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாடா ஹேரியர் இந்திய வெளியீட்டு விவரங்கள்
    X

    டாடா ஹேரியர் இந்திய வெளியீட்டு விவரங்கள்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலான ஹேரியர் காரின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #TataHarrier #Car



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை ஜனவரி 23 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஐந்து பேர் அமரக்கூடிய டாடா ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடாலாக இருக்கிறது.

    டாடா ஹேரியர் மாடல் அந்நிறுவனத்தின் புதிய OMEGARC பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாகி இருக்கிறது. புதிய ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.

    டாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் என்ஜின் வழங்கப்படுகிறுது. இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த என்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.



    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இது இருக்கும் என தெரிகிறது.

    எஸ்.யு.வி. மாடலில் பெரிய 5-ஸ்போக் அலாய் வீல்கள், டூ-டோன் ORVMகள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. சிக்னல் லைட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் மிதக்கும் ரூஃப் டிசைன், ஃபிளார்டு வீல் ஆர்ச்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, பெரிய ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ.16 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.21 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×