என் மலர்
செய்திகள்

உடுமலைக்கு கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் வந்திறங்கியதை காணலாம்
உடுமலையில் கமல் பிரசாரம் திடீர் ரத்து- காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
மடத்துக்குளம் பிரசாரத்தை முடித்துவிட்டு உடுமலை எஸ்.வி.மில் மைதானத்திற்கு வந்த கமல்ஹாசன், ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்று விட்டார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டசபை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று மாலை 4.30 மணிக்கு உடுமலைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஹெலிகாப்டர் மூலம் உடுமலை எஸ்.வி. மில் மைதானத்தில் கமல் வந்து இறங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து கமலை வரவேற்க ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் எஸ்.வி.மில் மைதானம் முன்பு திரண்டனர். மேலும் உடுமலை பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான தொண்டர்கள் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் காத்திருந்தனர்.
இந்தநிலையில் மாலை 4.45 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய கமல் திடீரென அங்கிருந்து மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பிரசாரத்திற்காக சென்று விட்டார். உடுமலை நால்ரோடு பகுதியில் 5 நிமிடம் மட்டும் பேசி விட்டு சென்றார். மீண்டும் உடுமலை வந்து பேசுவார் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருந்தனர்.
இந்தநிலையில் மடத்துக்குளம் பிரசாரத்தை முடித்து விட்டு உடுமலை எஸ்.வி.மில் மைதானத்திற்கு வந்த கமல்ஹாசன், ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்று விட்டார். இதனால் உடுமலையில் காத்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Next Story