search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் சினிமாவிற்கு கதை வசனம் எழுதலாம் - அமைச்சர் உதயகுமார்
    X

    மு.க.ஸ்டாலின் சினிமாவிற்கு கதை வசனம் எழுதலாம் - அமைச்சர் உதயகுமார்

    மு.க.ஸ்டாலின் சினிமாவிற்கு கதை வசனம் எழுதலாம் என்று அமைச்சர் உதயகுமார் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Ministerudayakumar #MKStalin #Cauveryissue

    காஞ்சீபுரம்:

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காஞ்சீபுரம் வழியாக காரில் சென்றார். காஞ்சீபுரத்தில் அமைச்சர் உதயகுமார் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த தீர்ப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையும். காவிரி விவகாரத்தில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் நடத்தும் நாடகம் மக்களிடம் எடுபடாது.

    தி.மு.க. மத்திய ஆட்சியில் பங்கேற்ற போதும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போதும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.


    ஆனால் அ.தி.மு.க. அரசு சட்டமன்றம், பாராளுமன்றம், மக்கள் மன்றம், நீதிமன்றம் என அனைத்து வகையிலும் காவிரி பிரச்சனையில் அழுத்தம் கொடுத்து தற்போது பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது.

    அந்த வெற்றியில் தி.மு.க. தங்களது பங்களிப்பு இல்லை என்று தெரிந்து தமிழக மக்களுக்கு காலம் காலமாக செய்த துரோகத்தினை மறக்கடிக்க போராட்டம் நடத்தி வேடிக்கை காட்டுகிறது. இந்த வேடிக்கையை பார்ப்பதற்கு மக்கள் தயாராக இல்லை.

    எனவே ஸ்டாலின் எடுபடாத இந்த நாடகத்தை நடத்துவதுற்கு பதிலாக சினிமாவிற்கும் மேடைநாடகத்திற்கும் கதை வசனம் எழுதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்பு செயலாளர்கள் வி.சோம சுந்தரம், மைதிலி, கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளி நாயகம், தமிழ்வாணன், படுநெல்லி தயாளன் உடனிருந்தனர். #Ministerudayakumar #MKStalin #Cauveryissue

    Next Story
    ×