என் மலர்
செய்திகள்

கோர்ட்டு தீர்ப்பு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- ஓ.பன்னீர்செல்வம்
ஆலந்தூர்:
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்துக்குள் அமைக்கப்பட வேண்டும், நீர் முறை செய்யும் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். அதில் உறுதியாக இருக்கிறோம். இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறையிடமும் வலியுறுத்தி உள்ளோம்.
நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டது உள்ளத்தை உலுக்கும் துயர சம்பவம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவிகள் மீது முழு கவனம் செலுத்தி அவர்களுக்கான முழு பாதுகாப்பை அரசு அளிக்கும்.
தமிழக அரசின் பட்ஜெட் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #localbodyelections #TNgovernment #tamilnews






