என் மலர்
செய்திகள்

செந்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் பேசிய காட்சி.
ஜெயலலிதாவைத்தான் வணங்கினோமே தவிர பின்னால் இருந்த பணிப்பெண் சசிகலாவை அல்ல- அதிமுக எம்எல்ஏ
தமிழகத்தில் உள்ள 1½ கோடி அ.தி.மு.க. தொண்டர்களும் ஜெயலலிதாவைத்தான் வணங்கினோமே தவிர பின்னால் இருந்த பணிப்பெண் சசிகலாவை அல்ல என குன்னம் எம்.எல்.ஏ. பேசினார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியதாவது:-
ஒரு ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்லும் மக்கள் அனைவரும் பயபக்தியுடன் பவ்வியமாக சிவனை வணங்கி வந்தார்கள். சிவன் கழுத்தில் இருந்த பாம்பு நம்மைதான் இந்த மக்கள் வணங்குகிறார்கள் என்று நினைத்து கொண்டு இருந்ததாம்.
கோவிலில் சிவன் இல்லாதபோது ஊருக்குள் சென்ற பாம்பை தீயசக்தி வந்து விட்டதாக எண்ணி அந்த பாம்பை விரட்டி அடித்தனர். அதேபோன்று தமிழகத்தில் இருக்கும் 1½ கோடி தொண்டர்களும் ஜெயலலிதாவைதான் விழுந்து வணங்கினோமே தவிர அவரது பின்னால் இருந்த பணிப்பெண் சசிகலாவை அல்ல.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் வேலைக்காரி சசிகலா, தானே ஜெயலலிதாவாக எண்ணிக்கொண்டு தொண்டர்களிடம் வந்த போது அ.தி.மு.க. தொண்டர்கள் தீயசக்தி வேலைக்காரி சசிகலாவை வெறுத்து ஒதுக்கினோம்.
தற்போது சிறையில் இருக்கும் சசிகலா மீண்டும் இரட்டை இலையை மீட்டு, தி.மு.க.வின் குடும்ப ஆட்சியைப்போன்று தனது குடும்ப ஆட்சியை கொண்டு வந்த தமிழக மக்களின் வரிப் பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்று கனவு காண்கிறார். இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews

Next Story