என் மலர்

  செய்திகள்

  கமல் கட்சி பெயரை தடை செய்ய வேண்டும் - தேர்தல் கமி‌ஷனில் புகார்
  X

  கமல் கட்சி பெயரை தடை செய்ய வேண்டும் - தேர்தல் கமி‌ஷனில் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கமல் கட்சி பெயருக்கு தடைவிதிக்க கோரி தமிழ்நாடு ஏழை எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் தமிழக தலைமை தேர்தல் கமி‌ஷனருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  நடிகர் கமல்ஹாசன் கடந்த 21-ந்தேதி புதிய கட்சியை தொடங்கி கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். புதிய கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயரிட்டுள்ளார்.

  6 கைகள் பின்னிப் பிணைந்திருப்பது போல கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

  கமல் கட்சி கொடியின் நடுவில் உள்ள 6 கைகள் இணைந்த சின்னம் மும்பை தமிழ்ச் சங்கத்தின் லோகோ என்றும், அதையே கமல் ஹாசன் பயன்படுத்தியுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.

  இந்த நிலையில் கமலின் கட்சி பெயருக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது கட்சி பெயருக்கு தடைவிதிக்க கோரி தமிழ்நாடு ஏழை எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் தமிழக தலைமை தேர்தல் கமி‌ஷனருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

  நடிகர் கமல் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயரிட்டுள்ளார். உச்சநீதிமன்ற அங்கீகாரமுள்ள மக்கள் நீதிமன்றத்தை அணுகும் பொது மக்களை திசை திருப்பும் வகையிலும் குழப்பும் வகையிலும் மக்கள் நீதி மய்யம் என நடிகர் கமல் தன் கட்சிக்கு பெயரிட்டுள்ளார்.

  எந்த ஒரு சட்ட வலிமையும் இல்லாத தன் கட்சியை மக்கள் நீதி மன்றத்திற்கு இணையான பெயர் சூட்டி மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்த நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். இது சாதாரண மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கமல் கட்சியின் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ட பஞ்சாயத்து செய்யவே உதவும்.

  ஆகவே ஏமாற்றும் வகையிலும் மக்கள் நீதிமன்ற மாண்பை சிதைக்கும் வகையிலும், மக்கள் நீதி மய்யம் பெயரில் கமல் கட்சி செயல்பட தடை விதிக்க வேண்டும். அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

  கட்சி தொடக்க விழாவில் பேசிய கமல் தமிழக மக்களை 6000 ரூபாய்க்கு வாக்குகளை விற்றவர்கள் என்றும் திருடர்கள் என்றும் கொச்சைப்படுத்தி அவதூறாக பேசியுள்ளார். ஆகவே மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்வதோடு கமல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

  Next Story
  ×