என் மலர்

  செய்திகள்

  மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு
  X

  மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகம் முழுவதிலும் உள்ள மணல் குவாரிகளை மூடும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பினை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
  சென்னை:

  புதுக்கோட்டை ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த எம்.ஆர்.எம். ராமையா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ராமையா,  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  மத்திய அரசிடம் உரிமம் பெற்று மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் முடக்கப்பட்டிருப்பதாகவும், அதனை வெளியே எடுத்துச் சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கும்படியும் மனுவில் கூறியிருந்தார்.

  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி துறைமுகத்தில் முடங்கி கிடக்கும் மலேசிய மணலை எடுத்து சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கி இன்று உத்தரவிட்டது.  அத்துடன் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  இந்த தடை குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறும்போது, ‘கனிம விதிகளை மீறி தமிழகத்தில் மணல் அள்ளப்பட்டது. குவாரியை அரசு எடுத்து நடத்துகிறது என்ற பெயரில் மணல் கொள்ளை நடந்தது. கொள்ளையடிக்கப்பட்ட மணலும் தமிழகத்திற்கு பயன்படாமல் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது’ என்றார்.

  மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 6 மாதம் அவகாசம் அளிக்காமல் உடனடியாக மணல் குவாரிகளை மூட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் இந்த உத்தரவை வரவேற்றுள்ளார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஆறுகள் பாதுகாக்கப்படும் என்றும், இறக்குமதி செய்யப்படும் மணலை வைத்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.  மணல் குவாரிகளை மூடுவதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என த.மா.கா. தலைவர் வாசன்  கூறியுள்ளார். மணல் குவாரிகளை வரைமுறைபடுத்துவதில் அரசு தவறியதால் நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  மாலை 6 மணிக்கு மேல் மணல் எடுக்கக்கூடாது, ஆனால் தமிழகத்தில் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடைபெறுகிறது என  எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
  Next Story
  ×