என் மலர்
செய்திகள்

தே.மு.தி.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் பதவி ஏற்கவேண்டும்: பொதுக்குழுவில் தீர்மானம்
தே.மு.தி.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் பதவி ஏற்க வேண்டும் என காரைக்குடியில் நடந்த தே.மு.தி.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரத்தில் உள்ள பி.எல்.பி. பேலஸ் மகாலில் இன்று தே.மு.தி.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் காலை தொடங்கியது.
கூட்டத்தில் பங்கேற்பதற் காக கட்சி தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் 11.30 மணிக்கு காரில் வந்து இறங்கினர். அவர்களுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன் மற்றும் முன்னாள் எம்.எல். ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கட்சி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள். பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் பதவி ஏற்க வேண்டும். கட்சியில் எத்தகைய முடிவுகளையும் எடுக்க விஜயகாந்துக்கு அதிகாரம் வழங்குவது, துணை செயலாளராக சுதீஷ், அவைத்தலைவராக அழகாபுரம் மோகன்ராஜ், பொருளாளராக இளங்கோவன் ஆகியோரை நியமனம் செய்வது, நீட் தேர்வில் குழப்பம் ஏற்படுத்திய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்,

தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுள்ள புதிய கவர்னருக்கு வாழ்த்து தெரிவிப்பது, மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை முழுமையாக வழங்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, விஜயகாந்த், பிரேமலதா மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story