search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்குழு தீர்மானம்"

    • ஊராட்சிகளுக்கு உடனடியாக நிதி வழங்க கோரி எஸ்.டி.பி.ஐ. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மாநில நிதி குழு நிதி வருவதில்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் ராமநாதபுரத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்து கொண்டு பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெமிலுனிஷா, ஜஹாங்கிர் அரூஷி, ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர்கள் சோமு, சுலைமான் பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல், செயலாளர் நஜ்முதீன், பொருளாளர் ஹசன் அலி, எஸ்.டி.டி.யு. மாநில செயற்குழு உறுப்பினர் காதர் கனி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் சோமு வரவேற்றார். மக்கள் தொடர்பு அதிகாரி நஜ்முதீன் தொகுத்து வழங்கினார்.

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவிபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் வெளியே அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும்

    ராமநாதபுரம்-கீழக்கரை ரெயில்வே மேம்பாலம் நீண்ட காலமாக பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை தூர்வார வேண்டும். ஊராட்சி தலைவர்களின் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது, அதை உயர்த்தி ரூ.5 லட்சம் வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 429 ஊராட்சிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மாநில நிதி குழு நிதி வருவதில்லை. அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை தொகுதி தலைவர் ஹனீப் நன்றி கூறினார்.

    ×