என் மலர்

  செய்திகள்

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம்: அன்புமணி ராமதாஸ்
  X

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம்: அன்புமணி ராமதாஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் என்ற அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
  நெல்லை:

  பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் பா.ஜனதா வேட்பாளரை ஆதரிப்பது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்றும் பா.ம.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  ஜனாதிபதி தேர்தலில் 8 சதவீத வாக்கு தமிழகத்தில் உள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள கட்சிகள் சேர்ந்து மத்திய அரசுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டுமானால் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் உடனே இதற்கு தீர்வு கிடைக்கும்.

  ஆனால் அ.தி.மு.க.வின் 3 அணிகளும் பா.ஜனதாவின் அடிமைகளாக இருந்து செயல்படுகிறார்கள். இதனால் தான் மத்திய அரசு நீட் தேர்வு, மீத்தேன் எரிவாயு திட்டம், முல்லை பெரியாறு திட்டம், வறட்சி நிவாரணம், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட எந்த பிரச்சினைகளையும் கண்டு கொள்ளாமல் உள்ளது.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேதான் நாங்கள் இப்போது இந்த கோரிக்கையை வைத்து உள்ளோம்.  தமிழகத்தில் மணல் குவாரிகள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். இது மணல் கொள்ளையை ஊக்குவிப்பதாகும். நாங்கள் மணல் குவாரியை மூடவேண்டும் என்று கோர்ட்டு வரை சென்று பல மணல் குவாரிகளை மூடி உள்ளோம். மதுக்கடைகளையும் மூடி உள்ளோம். தமிழகத்தில் 57 சதவீத மதுக்கடைகள் மூடப்பட்டது. இருந்தாலும் மது விற்பனை 2.5 சதவீதம் உயர்ந்து உள்ளது. அந்த அளவிற்கு மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது.

  தமிழகத்தில் உள்ள மக்கள் கோபத்திலும், வேதனையிலும் உள்ளனர். முதல்-அமைச்சர் தவறு செய்கின்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளார். முதல்-அமைச்சரை, அமைச் சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மிரட்டுகிறார்கள் அந்த நிலை தமிழகத்தில் உள்ளது.

  சரக்கு சேவை வரியால் தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும். தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும். இதற்கு தீர்வு காண வேண்டுமானால் முதல்-அமைச்சர் மத்திய அரசை கண்டித்து பேசவேண்டும். அனைத்து எம்.பி.களும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் ஆனால் தமிழகத்தில் உள்ள ஆளும்கட்சியால் அது முடியாது.  உள்ளாட்சி தேர்தலை இரட்டை இலை சின்னம் கிடைத்தால் தான் நடத்துவார்கள். உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடும்.

  இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

  Next Story
  ×