என் மலர்
செய்திகள்

அரசு பள்ளிகளில் கணினி அறிவியலையும் ஒரு பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
அரசு பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியலையும் ஒரு பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாக இடம் பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் கணினி அறிவியல் பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் அனைத்திலும் கணினிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதலே கணினிப் பாடம் கற்றுத்தரப்படுகிறது.
கணினி படித்த ஆசிரியர்கள், கணினி படிக்க விரும்பும் மாணவர்கள் என இரு தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டில் 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியலையும் ஒரு பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட எந்தப் பட்டப்படிப்பாக இருந்தாலும் அதில் 3 முதல் 6 மாதங்களுக்கான கணினிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இதற்குத் தேவையான கணினி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். அத்துடன் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 17,000 பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிலைப்பு செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story