search icon
என் மலர்tooltip icon

    நாகலாந்து

    • பிரதமர் மோடி, உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர்.
    • காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பயன்படுத்திய வார்த்தை கண்டனத்துக்குரியது.

    கோஹிமா :

    நாகாலாந்து சட்டசபை தேர்தலையொட்டி, மான் டவுன் என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி, உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர். நாட்டின் 80 கோடி ஏழைகள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கியவர். அப்படிப்பட்ட எங்கள் அன்புக்குரிய தலைவர் பற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பயன்படுத்திய வார்த்தை கண்டனத்துக்குரியது.

    ராகுல்காந்தி தலைவர் ஆனதில் இருந்து காங்கிரசின் தரம் நாளுக்குநாள் சரிந்து வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தொலைநோக்கி வைத்து பார்த்தால் கூட காங்கிரசை பார்க்க முடியாது என்று ராகுல்காந்திக்கு சொல்லிக் கொள்கிறேன். அந்த அளவுக்கு ஓட்டுச்சீட்டு மூலமாக மக்கள் பதில் அளிப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் அதானியை பிரதமர் மோடியுடன் தொடர்புபடுத்தும்வகையில், 'நரேந்திர கவுதம்தாஸ் மோடி' என்று பிரதமர் பெயரை குறிப்பிட்டார். அதற்குத்தான் அமித்ஷா கண்டனம் தெரிவித்ததாக தெரிகிறது.

    • வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 21-வது கவர்னர் இல.கணேசன் ஆவார்.
    • முதல்-மந்திரி நெய்பியூரியோ, துணை முதல்-மந்திரி ஓய்.பட்டான், சபாநாயகர், மந்திரிகள், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

    கோகிமா:

    14 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக இருந்தார். அவர் நாகாலாந்து கவர்னராக மாற்றப்பட்டார். ஜெகதீஷ் முகிக்கு பதிலாக அவர் மாற்றப்பட்டார். ஜெகதீஷ் அசாம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நாகாலாந்து மாநில கவர்னராக இல.கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவுகாத்தி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    முதல்-மந்திரி நெய்பியூரியோ, துணை முதல்-மந்திரி ஓய்.பட்டான், சபாநாயகர், மந்திரிகள், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 21-வது கவர்னர் இல.கணேசன் ஆவார். அங்கு வருகிற 27ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    • நாகை மாவட்டம், நாகூர் நாகநாதர் கோவிலில் ஆனிமாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது
    • விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 30-ந் தேதி அன்று பள்ளிகள் செயல்படும்.

    நாகை:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம், நாகூர் நாகநாதர்கோவிலில் ஆனிமாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை, வீதி உலா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 12-ந்தேதி (இன்று) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×