search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் பட்டுப் புடவைகள் வாங்கும்போது..
    X

    பெண்கள் பட்டுப் புடவைகள் வாங்கும்போது..

    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும்.
    பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசின் ‘சில்க் மார்க்’ முத்திரை பதிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் தரமானவை.

    பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும் விதமும் பட்டு புடவைகளின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. மல்பரி புழுக்களில் இருந்து தயாரிக்கப்படும் பட்டுக்கள்தான் பிரபலமானவையாக இருக்கின்றன.

    வட மாநிலங்களில் வன்யா ரக பட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இவை மல்பரி பட்டு நூல்களை விட விலை அதிகமானவை. பருத்தி நூல் போன்றே காட்சியளிக்கும்.

    பட்டுப்புடவைகளை அதிக நாட்கள் மடித்த நிலையிலேயே வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பட்டு நூல் இழைகள் சிதைந்துபோய் விடும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வெளியே எடுத்து மாற்றி மடித்து பாதுகாக்க வேண்டும்.

    பட்டுப்புடவைகளில் அழுக்குகள், கறைகள் படிந்தால் முடிந்த அளவுக்கு தண்ணீர் கொண்டே சுத்தப்படுத்திவிட வேண்டும்.

    பட்டுப்புடவைகளை குறிப்பிட்ட மாத இடைவெளியில் வெளியே எடுத்து காற்று படும்படி உலர்த்த வேண்டும்.
    Next Story
    ×