என் மலர்
கிச்சன் கில்லாடிகள்

வெண்டைக்காய் மிளகு பிரை
சூப்பரான வெண்டைக்காய் மிளகு பிரை
தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வெண்டைக்காய் மிளகு பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 1/4 கிலோ,
மிளகு - 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பூண்டு - 3 பல்,
கடுகு - தாளிக்க.
செய்முறை
வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காய விட்டு, கடுகு தாளித்து வெண்டைக்காயை நன்கு வதக்கவும்.
மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு போட்டு அரைக்கவும்.
பிறகு வதங்கிய வெண்டைக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும்.
நன்கு சுருள வந்தபின் இறக்கி பரிமாறவும்.
சூப்பரான வெண்டைக்காய் மிளகு பிரை ரெடி.

Next Story