search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மொறுமொறு சேமியா பக்கோடா
    X
    மொறுமொறு சேமியா பக்கோடா

    மொறுமொறு சேமியா பக்கோடா

    மொறுமொறுப்பான பக்கோடா வகைகளை வீட்டிலேயே தயார் செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக டீ, காபியுடன் சேர்த்து ருசிக்கலாம். உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த சேமியா - கால் கிலோ  
    கடலை மாவு - 50 கிராம்  
    இஞ்சி துண்டு - 1  
    பெ.வெங்காயம் - 3 (நறுக்கவும்)  
    பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்)  
    அரிசி மாவு - கால் கப்  
    எண்ணெய், உப்பு - தேவைக்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    செய்முறை:

    அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, இஞ்சி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கொட்டி போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து மாவு பதத்துக்கு கொண்டு வரவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மாவு கலவையை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான சேமியாபக்கோடா ரெடி.
    Next Story
    ×