search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ்
    X
    வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ்

    சுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ்

    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெண்டைக்காயுடன் முட்டை சேர்த்து சூப்பரான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முட்டை - 4
    வெண்டைக்காய் - 100 கிராம்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - சுவைக்கு

    வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ்

    செய்முறை:

    வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெண்டைக்காயின் பச்சை வாசனை போகும்வரை வதக்கியதும் தனியாக வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.

    அதனுடன், முட்டையை உடைத்து ஊற்றி வேகவிடவும்.

    முட்டையும், வெண்டைக்காயும் வெந்ததும் இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

    சுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×