search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிளம் கேக்
    X
    பிளம் கேக்

    கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: பிளம் கேக்

    கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக எளிய முறையில், ரம் உபயோகப்படுத்தாமல் பிரஷர் குக்கரிலேயே சுவையான பிளம் கேக்குகளை தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிறிதாக நறுக்கிய பேரிச்சம்பழம் - 1/4 கப்
    உலர்ந்த கருப்பு திராட்சை - 1/4 கப்
    உலர்ந்த பொன்நிற திராட்சை - 1/4 கப்
    டூட்டி, ப்ரூட்டி - 1/4 கப்
    சிறிதாக நறுக்கிய செர்ரீஸ் - 1/4 கப்
    திராட்சை (அ) ஆரஞ்சு பழரசம் - 1 கப்
    பழப்பு நிறச்சர்க்கரை - 1 கப்
    ஏலக்காய் - 2
    கிராம்பு - 2
    பட்டை (ஒரு இன்ச் நீளம்) - 1
    நறுக்கிய பாதாம் - 1 ஸ்பூன்
    நறுக்கிய முந்திரி - 1 ஸ்பூன்
    நறுக்கிய பிஸ்தா - 1 ஸ்பூன்
    முட்டை - 2
    மைதா - 1 பெரிய கப்
    பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
    உப்பு - 1/4 ஸ்பூன்
    உருக்கிய வெண்ணெய் - 1/2 கப்
    வெண்ணிலா எசென்ஸ் - 1/2 ஸ்பூன்
    பார்ச்மென்ட் பேப்பர்

    பிளம் கேக்

    செய்முறை:


    சிறிதாக நறுக்கிய பேரீச்சம்பழம், டூட்டி, ப்ரூட்டி செர்ரீஸ், கருப்பு உலர்திராட்சை, உலர்ந்த பொன்நிற திராட்சை இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் திராட்சை (அ) ஆரஞ்சு சாறை உலர் பழங்கள் போட்டு மூழ்கும் அளவிற்கு ஊற்றி நன்றாகக் கலந்து குறைந்த பட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும் உலர் பழங்கள் ஊற ஊற அவற்றின் அளவு பெரியாதவதுடன் மிகுந்த சுவையையும் கொடுக்கும்.

    மிக்ஸி ஜாரில் பழுப்புநிறசர்க்கரை (ப்ரெளன்சுகர்), ஏலக்காய், கிராம்புபட்டை, இவற்றைச் சேர்த்து நன்கு பெளவுடராகும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும்.

    மற்றொரு கிண்ணத்தில் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா இவற்றுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவை சோத்துக் கலக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். மைதா மாவுடன் இவற்றைக்கலக்கி வைப்பதால் கேக்கை பேக் செய்யும் போது இந்த நட்ஸ்கள் கேக்கின் அடியில் சென்று நிற்காமல் மேற்புறம் இருக்கும்.

    மற்றொரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அவற்றை பிளென்டர் உதவியுடன் நன்றாக அடித்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த முட்டைக் கலவையில் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பழுப்பு சர்க்கரைப் பொடியை சலித்து (சல்லடையில்) சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

    பிளென்டரில் இவற்றைக் கலக்கும் பொழுது முட்டையும், சர்க்கரையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்துவிடும்.

    மைதா, பேக்கிங் பெளடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பைச் சேர்த்துக் அவற்றை சல்லடையில் சலித்து பின்பு முட்டைகலவையில் சேர்த்து உருக்கி வைத்திருக்கும் வெண்ணையையும் அதில் ஊற்றி கரண்டியால் நன்றாகக் கலக்கி கேக் செய்வதற்கான மாவுக் கலவையைத் தயார் செய்துகொள்ளவேண்டும்.

    இந்த கேக் செய்வதற்கான மாவில் ஊற்றிய உலர் பழங்களைச் சேர்த்து நன்றாக கரண்டியால் கலக்கி கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியைச் சேர்த்துவெண்ணிலா எசென்சையும் சேர்த்து நன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு வட்டவடிவமான பிரஷர் குக்கரின் உள்ளே பயன்படுத்தப்படும் அலுமினியப் பாத்திரத்தில் உட்புறம் முழுவதும் வெண்ணையைத் தடவி உட்புறம் பார்ச்மென்ட் பேப்பரை வைத்து கேக் கலவையை அதில் ஊற்றி காற்றுக் குமிழ்கள் இல்லாதவாறு பாத்திரத்தை நன்கு தட்டி சமன் செய்து கொள்ள வேண்டும்.

    புரஷர் குக்கரில் இரண்டு டம்ளர் நீரை ஊற்றி ஐந்து நிமிடம் நன்கு சூடேரிய பிறகு அதனுள் சிறிய ஸ்டாண்டை வைத்து அதன்மேல் கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து குக்கரின் மூடியை மூடிவிடவேண்டும்.

    மிதமான தீயில் 40 முதல் ஐம்பது நிமிடங்கள் வைத்து பின்பு குக்கா மூடியை திறந்தால் சுவையான ஃப்ரெஷ்ஷான, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிளெம் கேக் ரெடி.

    கேக் சூடு ஆறியவுடன் ஒரு தட்டில் தலைகீழாக கேக் பாத்திரத்தை வைத்தால் கேக் தனியாக வந்துவிடும்.

    சூப்பரான பிளம் கேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×