என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான பப்பாளிப்பழ கேசரி
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான பப்பாளிப்பழ கேசரி

    குழந்தைகளுக்கு கேசரி என்றால் மிகவும் பிடிக்கும். பப்பாளி சேர்த்து கேசரி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கேசரியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்
    பப்பாளிப்பழத் துண்டுகள் - 2 கப்
    சர்க்கரை - 1 கப்
    நெய் - தேவையான அளவு
    முந்திரிப்ப‌ருப்பு ‍- சிறிது
    காய்ந்த‌ திராட்சை - சிறிது
    ஏல‌க்காய் பொடி - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    ஒரு வாண‌லியில் நெய்யை விட்டு, அதில் ரவையைப் போட்டு வாச‌னை வ‌ரும் வ‌ரை வ‌றுத்து எடுத்து த‌னியாக‌ வைத்துக் கொள்ள‌வும். இதில் நெய்யை தாராளமாக ஊற்றி செய்தால் சூப்பராக இருக்கும்.

    அதே வாண‌லியில் முந்திரி, திராட்சை ஆகிய‌வற்றை‌யும் வ‌றுத்து எடுத்து வைத்துக் கொள்ள‌வும்.

    பப்பாளி பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும்.

    ரவை எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள் பப்பாளிப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

    மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறி, கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

    சூப்பரான பப்பாளிப்பழ கேசரி ரெடி.

    கவனிக்க: இந்த கேசரிக்கு "புட் கலர்" எதுவும் சேர்க்கத் தேவையில்லை. பப்பாளி சேர்த்தவுடன், கேசரிக்கு இயற்கையான ஆரஞ்சு நிறம் கிடைத்து விடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×