என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: மீன் பிரியாணி
    X

    கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: மீன் பிரியாணி

    கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது உலகமெங்கும் பரவலாக சமைத்து பரிமாறப்படும் உணவு வகைகளுள் ஒன்றான மீன் பிரியாணி செய்முறையை பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - அரை கிலோ
    அரிசி - அரை கிலோ
    பாசுமதி அரிசி  - கால் கிலோ
    வெங்காயம் - அரை கப் 
    தக்காளி - கால் கப்
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] தனியா தூள் - 1 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    தயிர் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு 
    ஏலக்காய், பட்டை - சிறிதளவு



    செய்முறை :

    மீனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

    பாசுமதி அரிசி மற்றும் அரிசியை தனியாக உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லி இலை, தயிர், உப்பு ஆகியவற்றை கொட்டி கிளற வேண்டும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் மீனை சேர்த்து லேசாக கிளறிவிட வேண்டும். அப்போது [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] தனியா தூள்
    ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது வேக வைத்த சாதத்தை மீன் மசாலா குக்கரில் கொட்டி மூடி வைத்து அடுப்பை மிதான தீயில் வேகவிட வேண்டும்.

    மிதமான தீயில் வைத்து பதத்துக்கு வந்ததும் நெய் சேர்த்து கிளறி இறக்கவும். 

    ருசியான மீன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×