என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் பக்கோடா
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் பக்கோடா

    பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூடாக ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் -  200 கிராம்
    வெங்காயம் - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
    பெருங்காய்தூள் - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்
    கடலை மாவு - 5 டீஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு



    செய்முறை :

    * காளானை நன்றாக கழுவி நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அடுத்து அதனுடன், அரிசி மாவு, கடலை மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான் மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * சூப்பரான காளான் பக்கோடா ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×