என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சளி தொல்லைக்கு நாட்டுகோழிக்கறி சூப் குடிக்கலாம். சூப் குடித்த பின்னர் இருக்கும் சிக்கனில் மிளகு போட்டு வறுவல் செய்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழி - ஒரு கிலோ
    பெரியவெங்காயம் - 3
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டு ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5
    மிளகுதூள் - 4 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * நாட்டுக்கோழியை துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில் வரை விட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்தால் தான் சிக்கன் பஞ்சுபோல ஆகும்.

    * விசில் போனவுடன் சிக்கனை எடுத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை சூப் போல குடிக்கலாம் சளி நீங்கும்.

    * வெந்த சிக்கனை கை பொறுக்கும் சூட்டில் சின்ன சின்ன பீஸாக பிய்ந்து தட்டில் வைக்கவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். இத்துடன் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    * நன்றாக வதக்கிய உடன் காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்.

    * இதனுடன் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி நன்றாக ப்ரை ஆகும் வரை வதக்கவும்.

    * இப்போது சீரகத்தூள், பெப்பர் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    * தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

    * சுவையான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வருவல் தயார்.

    * இது மழைக்காலத்திற்கு ஏற்ற சூப்பரான சைடு டிஷ்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டை பிரியாணி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - அரை கிலோ,
    முட்டை - 10,
    தக்காளி - 4,
    பெரிய வெங்காயம் - 3,
    கடைந்த தயிர் - 1 கப்,
    எண்ணெய் - அரை கப்,
    நெய் - கால் கப்,
    உப்பு - 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன்.

    அரைக்க :

    பட்டை - 2,
    லவங்கம் - 2,
    ஏலக்காய் - 6,
    பச்சை மிளகாய் - 5,
    புதினா - ஒரு கைப்பிடி,
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி.

    செய்முறை :

    * அரிசியைக் கழுவி ஊறவிடவும்.

    * அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். பிறகு, அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

    * ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்த மசாலா, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள வதக்கி எண்ணெய் ஓரங்களில் வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு கொதிக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.

    * மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’  போட்டு இறக்கவும்.

    * சுவையான முட்டை பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் லாலிபாப் மிகவும் பிடிக்கும். கிவி பழத்தை கொண்டு சாக்லேட் லாலிபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிவி பழம்
    டார்க் சாக்லேட்,
    தேங்காய் எண்ணெய்,
    ஐஸ்கிரீம் குச்சிகள்.

    இது அனைத்தும் நீங்கள் எவ்வளவு செய்ய விரும்புகிறீர்களோ அந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    செய்முறை :

    * கிவி பழத்தை தோல் நீக்கி வட்டமாக ( சற்று தடிமனாக ) வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.



    * வெட்டிய கிவி பழத்தின் நடுவில் ஐஸ்கிரீம் குச்சிகளை குத்திவிட வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் டார்க் சாக்லேட்டை போட்டு கொதிக்கும் பாத்திரத்தில் வைத்து சாக்லேட் கரையும் வரை சூடு செய்ய வேண்டும்.



    * சாக்லேட் நன்றாக கரைந்தவுடன் அந்த கிவி பழங்களை சாக்லேட் முழுவதும் நன்றாக படும் படி செய்யவும்.

    * பின்னர் அதனை குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் நேரம் வைக்க வேண்டும்.



    * பின் எடுத்து சாப்பிட்டால் சுவையான கிவி சாக்லேட் லாலி பாப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புளிச்சக்கீரை மட்டன் குழம்பு மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிச்சக்கீரை - 1 கட்டு
    மட்டன் - 1/2 கிலோ
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    ஏலக்காய் - 3-4
    கிராம்பு - 2-3
    பட்டை - 1 இன்ச்
    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது

    செய்முறை :

    * புளிச்சகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்சக்கீரையை சேர்த்து வதக்கி மூடி வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, வைத்துக் கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

    * அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

    * பின் அதில் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    * விசில் போனதும், குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் புளிச்சக்கீரையை நன்கு மசித்து சேர்த்து கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து, பின் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

    * ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காயம், வாழைக்காய், மிளகாய் பஜ்ஜியை போல் பிரெட் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - ¼ கப்
    பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    ஓமம் - ½ தேக்கரண்டி
    சாட் மசாலா தூள் - ¾ தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - தேவையான அளவு
    பிரட் துண்டுகள் -  5
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும்.

    * பின் சமையல் சோடா ஒரு சிட்டிகை சேர்த்து மாவை நன்றாக கிளறி வைக்கவும்.

    * பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பிரட் துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எளிய முறையில் பிரெட்டில் மெதுவடை செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) - 10,
    ரவை - 5 டீஸ்பூன்,
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    * பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டு வெட்டிக் கொள்ளவும்.

    * வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும்.

    * கடாயில் எண்ணெய் சூடானதும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில்  பொரித்தெடுக்கவும்.

    * சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் மெதுவடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சில குழந்தைகள் சிக்கன் சாப்பிடாது. சிக்கன் சாப்பிடாத குழந்தைகளுக்கு சிக்கனை வடை போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் (boneless ) - 300 கிராம்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    மிளகு தூள் - சிறிதளவு
    கரம் மசாலா - 1 ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    பிரட் தூள் - 150 கிராம்
    முட்டை - 1
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் நன்றாக வடிந்த பின்னர் மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கனுடன், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளை கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும்.

    * ஒரு பிளேட்டில் பிரட் தூளை வைத்து கொள்ளவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * இப்போது சுவையான சிக்கன் கொத்துக்கறி வடை ரெடி.

    * சிக்கனில் கொத்துகறியும் வாங்கி செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எளிய முறையில் சுவையான மிளகு சிக்கன் டிக்கா எப்படி செய்வது என்பதை கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    மிளகு தூள் - 5 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் விழுது - 4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு
    தயிர் - 200 மிலி
    உப்பு - தேவைக்கு
    எலுமிச்சை சாறு - சிறிதளவு

    செய்முறை  :

    * சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவிய பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு போட்டு முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

    * பின்னர் தயிரில் சிறிதளவு உப்பு, பச்சை மிளகாய் விழுது, பொடித்த மிளகு போட்டு கலக்கி ஏற்கனவே ஊற வைத்த சிக்கனில் போட்டு எல்லாவற்றையும் கலந்து மறுபடியும் முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

    * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை மட்டும் தனியாக எடுத்து வேகவைக்கவும். மூடி போட்டு மிதமான தீயில் எரிய விடவும். 5 நிமிடம் வெந்த உடன் சிக்கனை திருப்பி விடவேண்டும். பின்னர் சிக்கன் நன்றாக வேகும் வரை திருப்பி விட வேண்டும்.

    * லேசாக எண்ணெய் விட்டாலே போதும் அதிக எண்ணெய் தேவையில்லை.

    * சிக்கன் நன்றாக வெந்த உடன் தட்டில் எடுத்து எலுமிச்சை சாறு விடவும். வாசனை சூப்பராக இருக்கும்.

    * சுவையான சிக்கன் டிக்கா ரெடி. இதை மைக்ரோவேவ் ஓவனிலும் செய்யலாம். வாணலியிலும் டீப் ப்ரை செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க பல வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - 2 கோப்பை, (தேவைப்பட்டால் 2 ஸ்பூன் பாசிப்பருப்பு சேர்த்துக்கொள்ளலாம்)
    உப்பு - 1 ஸ்பூன்
    தேங்காய் துருவியது - 1 மூடி
    சீரகம் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 கொத்து
    வர மிளகாய் - 4
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    * அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த மாவைக்கொட்டி இடை விடாமல் மிதமான தீயில், கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும்.

    * பிறகு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.

    * அறியாதும் எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க பல வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    அரிசி மாவு - 1 கப்
    தண்ணீர் - 1 1/2 கப்
    காராமணி - 1 பிடி
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    எண்ணெய்,
    கடுகு,
    உளுத்தம் பருப்பு,
    பெருங்காயம்,
    கறிவேப்பிலை

    செய்முறை :

    * பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசி மாவை வெறும் கடாயில் போட்ட நிதானமான சூட்டில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

    * காராமணியை குக்கரில் போட்டு வேக வைக்கவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளித்து அத்துடன் காராமணியைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * நன்கு கொதி வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து மாவைக் கொட்டிக் கட்டி விழாமல் கிளறி இறக்கவும்.

    * இறக்கிய மாவை இளம் சூட்டில் கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

    * இப்போது சுவையான தட்டைப்பயறு கொழுக்கட்டை கார தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க பல வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்து அரைத்த அரிசி மாவு - 1 கப்
    காராமணி - 1 கைப்பிடி அளவு
    பொடியாக நறுக்கிய தேங்காய் 1/2 கப்
    வெல்லம் 1/2 கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    நெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    * காராமணியை வறுத்து குக்கரில் வேகவைக்கவும்.

    * வெல்லத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேங்காய், நெய், வேக வைத்த காராமணி, ஏலக்காய் தூள், வறுத்த மாவு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    * ஆறியதும் வேண்டிய வடிவில் தட்டி ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

    * விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் காராமணி கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க பல வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெல்லம் - கால் கிலோ
    பச்சரிசி மாவு - கால் கிலோ
    கடலைபருப்பு - ஒரு டம்ளர்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - மூன்று தேக்கரண்டி

    செய்முறை :

    * வாணலியில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

    * கடலை பருப்பை 30 நிமிடம் ஊற விட்டு ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அதை பாகுடன் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும்.

    * பாகுடன் நன்றாக மிக்ஸ் ஆனதும் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும். தண்ணீர் இல்லாமல் வற்றி வாணலியில் ஒட்டாமல் வரும். அப்போது தனியே எடுத்து ஆற வைக்கவும்.

    * பச்சரிசி மாவுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியின் காம்பால் கிளறி பின் பொறுக்கும் சூட்டில் கையால் பிசைந்து வைக்கவும்.

    * மாவை கையில் வைத்து விருப்பத்திற்கு ஏற்ப தட்டி அதன் உள்ளே பூரணம் சேர்த்து மூடி வைக்கவும். முழு மாவிலும் இப்படி செய்து வைக்கவும்.

    * அதனை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

    * சூடான சுவையான கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×