என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    கோவிலில் கொடுக்கும் புளியோதரை அனைவருக்கும் பிடிக்கும். எப்படி செய்தாலும் கோவிலில் செய்வதுபோல் வரவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த செய்முறையை தருகிறோம்.
    தேவையான பொருட்கள் :

    நல்லெண்ணை - 5 தேக்கரண்டி
    வேர்கடலை - 1/4 கப்
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
    புளி - சிறிய எலுமிச்சை அளவு
    உப்பு - தேவையான அளவு
    அரிசி - 2 கப்

    வறுத்து பொடிக்க :

    நல்லெண்ணை - 1 1/2 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    தனியா - 1/2 தெக்கரண்டி
    வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
    எள்ளு - 1 தேக்கரண்டி

    செய்முறை :

    * வறுத்துப் பொடிக்க வேண்டிய பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அரிசியை உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

    * புளியை கரைத்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின் கடலை பருப்பு, உளுந்து, வேர்கடலை சேர்த்து பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.

    * அடுத்து, புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    * இப்போது உப்பு போடக் கூடாது. ஏன்னா, கொதிச்ச பிறகு குழம்பு அளவு கம்மியாகும் போது உப்பு அதிகமாகிடும். அதனால் சாப்பாடு கிளரும் போது உப்பு போட்டுக்கொள்ளலாம்.

    * புளிக்கரைசல் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்ததும் உதிரியாக வடித்த சாதம், தேவையான அளவு உப்பு சோத்து, அதனுடன் அரைத்து வைத்த அந்த பொடியையும் தேவையான அளவுக்கு சேர்த்து கலந்துவிடவும்.

    * 20 நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.

    * சூப்பரான கோவில் புளியோதரை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த மஷ்ரூம் பிரியாணி மிகவும் பிடிக்கும். இப்போது செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரியாணி அரிசி - 300 கிராம்
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    புதினா - அரை கைப்பிடி
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    எலுமிச்சை -1
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 3
    நெய் - 50 கிராம்
    எண்ணெய் - 50 மில்லி
    மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
    மஷ்ரூம் - 500 கிராம்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செட்டிநாடு மசாலாத்தூள் :

    பட்டை - 4
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 3
    அன்னாசிப்பூ - 1
    கறுப்பு ஏலக்காய் - 1
    மிளகு - 1 டீஸ்பூன்
    தனியா - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    சோம்பு - அரை டீஸ்பூன்
    ஜாதிக்காய் - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    * செட்டிநாடு மசாலாவுக்குக் கொடுத்தவற்றை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்த கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பிரியாணி அரிசியை இரண்டு முறை அலசி, தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

    * அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், புதினா, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    * அனைத்து நன்றாக வதங்கியதும் அதில் செட்டிநாடு மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அடுத்து அதில் 600 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

    * தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து விட்டு போட்டு அதனுடன், மஷ்ரூம், உப்பு சேர்த்து அரிசி முக்கால் பதம் வேக வரும் வரை வேக விடவும். தண்ணீர் வற்றியிருக்க வேண்டும்.

    * இப்போது அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைக்கவும். தோசை கல்லின் மேல் சீரகச்சம்பா அரிசி இருக்கும் பாத்திரத்தை வைத்து தீயை சுத்தமாகக் குறைத்து மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடம் வேக விடவும்.

    * பிறகு மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறிப் பரிமாறவும்.

    * சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுண்டைக்காய் சப்ஜி சூப்பராக இருக்கும். இப்போது சுண்டைக்காய் சப்ஜியை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை சுண்டைக்காய் - 1 கப்
    சின்ன வெங்காயம் - 5
    தக்காளி சிறியது - 1
    துவரம் பருப்பு - 1/2 கப்
    மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
    புளி - சிறிய எலுமிச்சையளவு
    குழம்புப்பொடி - 2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை :

    * துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    * சுண்டைக்காயை காம்பை எடுத்து விட்டு இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

    * சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.

    * ஒரு குக்கரில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் சுண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * பின்னர் வேக வைத்த துவரம் பருப்பு, புளிக்கரைசல், குழம்புப் பொடி, உப்பு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் போட்டு இறக்கவும்.

    * விசில் போனவுடன் குக்கரைத் திறந்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான சுண்டைக்காய் சப்ஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த சாதம் சாப்பிட சூப்பராக இருக்கும். இப்போது ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொன்னி புழுங்கல் அரிசி - 1 கப்
    கடலைப் பருப்பு - 1/2 கப்
    துவரம் பருப்பு - 1 கப்
    தண்ணீர் - 5 கப்
    சின்ன வெங்காயம் - 10
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 6 பல்
    புளி - எலுமிச்சையளவு
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    மிளகாய் பொடி - 4 டீஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
    முருங்கைக் கீரை - 1 கப்
    அரைக் கீரை - 1 கப்
    முருங்கைக்காய் - 1
    அவரைக்காய் - 10
    கொத்தவரங்காய் - 10
    கத்தரிக்காய் - 2
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு,
    உளுத்தம் பருப்பு,
    கறிவேப்பிலை

    வறுத்து அரைக்க :

    தேங்காய் துருவல் - கால் கப்
    வத்தல் மிளகாய் - 4
    கடலைபருப்பு - 2 ஸ்பூன்
    தனியா - 4 ஸ்பூன்

    செய்முறை :

    * அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பை நன்றாக கழுவி வைக்கவும்.

    * முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் முதலியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    * இஞ்சி, பூண்டை கரகரப்பாக அரைக்கவும்.

    * வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் போட்டு நன்றாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

    * புளியை கரைத்துக் கொள்ளவும்.

    * குக்கரில் கழுவிய அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, முருங்கைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் பொடி போட்டு 5 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    * பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மிளகாய் பொடி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

    * கடைசியாக வறுத்து அரைத்த பொடியை போட்டு 2 நிமிடம் கிளறி, குக்கரில் வேக வைத்துள்ள சாதத்தில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் .ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சாதத்தில் ஊற்றி கிளறி பரிமாறவும்.

    * சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்டைக்காயுடன் புளி சேர்த்து செய்யும் இந்த வெண்டைக்காய் மண்டி சூப்பராக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வெண்டைக்காய் - 1 1/2 கப்
    சின்ன வெங்காயம் - 1 கப்
    பூண்டு - 8 பல்
    தக்காளி - 1
    புளி - 1 எலுமிச்சை அளவு
    உப்பு - தேவையான அளவு
    ஊற வைத்து கழுவிய அரிசி நீர் - சிறிது

    தாளிப்பதற்கு…

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை:


    * வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஊற வைத்து கழுவிய அரிசி நீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை சிறிது நேரம் வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து, அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை போகும் வரை வதக்க வேண்டும்.

    * பிறகு வாணலியில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வெண்டைக்காய் பாதியாக வெந்ததும் அத்துடன் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

    * சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை புத்தாண்டு அன்று செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிது
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    மிளகு - 2 டீஸ்பூன்
    சோம்பு - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டனை சிறு துண்களாக வெட்டி நீரில் நன்கு கழுவி, குப்பரில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி 8 விசில் விட்டு, குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் சோம்பு மற்றும் மிளகை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள மட்டனை அப்படியே வாணலியில் போட்டு, தீயை அதிகரித்து, மட்டன் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள (சோம்பு, மிளகு) பொடியை சேர்த்து கிளறி கொத்தமல்லித் தூவி இறக்கவும்.

    * சூப்பரான செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்திக்கு கிரேவி என்று செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக காளான், குடைமிளகாயை வைத்து ஒரு சைடு டிஷ் தயாரித்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    மஸ்ரூம்/காளான் - 1 கப்
    குடமிளகாய் - 1/4 கப்
    பெரிய வெங்காயம் - 1/4
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    * காளானை சுத்தம் செய்து பெரிய துண்டுகளான நறுக்கி வைத்து கொள்ளவும்.

    * குடமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    * தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, சீரகத்தைப் போட்டு தாளித்த பின், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

    *  இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனைப் போக நன்கு வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் தேவையான அளவு உப்பு தூவி பிரட்டி, காளானை சேர்த்து 8 நிமிடம் நன்கு கிளறி விட்டு, காளான் மசாலாவை நன்கு உறிஞ்சும் படி வேக வைக்க வேண்டும்.

    * பிறகு குடமிளகாயை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    * கடைசியாக மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி பிரட்டி இறக்கினால், தவா மஸ்ரூம் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்தரிக்காய் நிறைய பேருக்கு பிடிக்காது. இந்த ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காயை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு கத்தரிக்காய் - அரை கிலோ,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய் - தேவைக்கு
    கறிவேப்பிலை - சிறிது.
    கொத்தமல்லி - சிறிதளவு

    அரைக்க:

    சின்ன வெங்காயம் - 10,
    தக்காளி - 2,
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
    தனியாத் தூள் - 1 டீஸ்பூன்,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 6 பல்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1.

    செய்முறை:

    * கத்தரிக்காயை பாதி காம்பு வரை நறுக்கி நான்காக கீறி (முழுவதுமாக வெட்டக் கூடாது) வையுங்கள்.

    * அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து, (தண்ணீர் சேர்க்க கூடாது) உப்பு சேர்த்து வையுங்கள்.

    * இந்தக் கலவையை எல்லா கத்தரிக்காயின் உள்ளேயும் சிறிது சிறிதாக அடைத்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பாதி கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அதில் மசாலா ஸ்டஃப்டு செய்து ஊறவைத்துள்ள கத்தரிக்காய்களை போடுங்கள். அரைத்த மசாலா மீதம் இருந்தால் அதையும் காயோடு சேர்த்து, மிதமான தீயில், மூடி வைத்து, வேக விடவும்.

    * அடிக்கடி கிளறி விட்டு வேக வையுங்கள்.

    * வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி கிளறி இறக்குங்கள்.

    * சூப்பரான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய் ரெடி.

    * இதற்கு எண்ணெய் சற்று அதிகமாக சேர்த்து கொண்டால் நன்றாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பேரீச்சையின் இனிப்பும் புதிதாக வறுக்கப்பட்ட காபியின் வாசனையும் ஒன்று சேரும் சூப்பராக இருக்கும். இப்போது பேரீச்சை வித் காபி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொட்டை இல்லா பேரீச்சை - 1 கப்
    உடனடி காபி பவுடர் - 10 தேக்கரண்டி
    பால் - 6 கப்
    பச்சை ஏலக்காய் - 6
    சர்க்கரை - 3 டீஸ்பூன்
    புதிய கிரீம் - ¾ கப்
    ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு

    செயல்முறை :

    * பேரீச்சை பழங்களின் கொட்டைகளை நீக்கி அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் காபி பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    * அடுப்பில் உள்ள காபி டிகாஷனுடன் சர்க்கரை, பச்சை ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சர்க்கரை நன்றாக கரையும் வரை காத்திருக்கவும். அதன் பின்னர் அடுப்பை அணைத்து சூடு ஆறும் வரை வைத்திருக்கவும்.

    * மிக்ஸியில் பேரீச்சைகளை போட்டு அதனுடன் சிறிது பால் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    * அடுத்து இதனுடன் ஐஸ் க்யூப்ஸ், ஆறவைத்த காபி டிகாஷன், பால் மற்றும் புதிய கிரீம் போன்றவற்றை சேர்த்து மீண்டும் நன்கு நுரை வரும் வரை அடிக்கவும். மிக்ஸியில் போட்டுள்ள பொருட்கள் நன்கு கடையப்பட்டு ஒன்று சேரும் வரை கலக்கவும்.

    * ஒரு உயரமான கண்ணாடி டம்ளாரில் இந்த மில்ஷேக்கை ஊற்றி அதன் மீது சிறிது காபி டிகாஷன் விட்டு மில்க் ஷேக்கை அலங்கரிக்கவும்.

    * இப்பொழுது பேரீச்சை வித் காபி மில்க் ஷேக் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சத்தான சம்பா ரவை பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பால் - 500 மி.லி.
    சம்பா ரவை - 200 கி
    நெய் - 2 ஸ்பூன்கள்
    சர்க்கரை - 1 கப்
    முந்திரிப்பருப்பு - 8 முதல் 10
    கிஸ்மிஸ் - 8 முதல் 10
    ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்

    செய்முறை:

    * பாலை தண்ணீர் சேர்க்காமல், பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

    * ஒரு சட்டியில், நெய்யையும் முந்திரிப்பருப்பையும் சேர்த்து கலந்து, அது பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பின் அதனுடன் கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து, அது பஞ்சு போன்று வரும் வரைக்கும் மீண்டும் வதக்கவும்.

    * அதே சட்டியில், சம்பா ரவையை சேர்த்து, சிறு தீயில் வைத்து நன்றாக கிண்டவும்.

    * நன்றாக கொதிக்க வைத்த கெட்டியான பாலை சம்பா ரவையுடன் சேர்க்கவும். கட்டி ஏற்படாமல் நன்றாக கிளறவும்.

    * பின் அதனுடன் ஏலக்காய் பொடி, சர்க்கரை, வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ் பழத்தை சேர்க்கவும்.

    சுவையான  சம்பா ரவை பாயாசம் தயார்.

     சம்பா ரவை பாயாசத்தை சூடாகவோ அல்லது ஆற வைத்தோ பரிமாறலாம்.


    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அசைவம் சாப்பிடாத நாட்களில் மீல் மேக்கர் பிரியாணி செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். இப்போது மீல் மேக்கர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 1/4 கப்
    மீல் மேக்கர் - 3/4 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    தேங்காய் பால் - 1/2 கப்
    தண்ணீர் - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    தக்காளி - 1 (நறுக்கியது)
    கொத்தமல்லி - 1/4 கப்
    புதினா - 1/8 கப்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    பட்டை - 1/4 இன்ச்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 1

    செய்முறை :

    * வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * பாசுமதி அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * ஒரு கப் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, அதில் மீல் மேக்கரை சேர்த்து 10 நிமிடம் தனியாக ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து மூன்று முறை குளிர்ந்த நீரில் கழுவி தனியாக வைத்து கொள்ளவும்.

    * அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * வெங்காயம் பென்னிறமாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.

    * அடுத்து அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

    * பின் அதில் மீல் மேக்கர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி விட்டு, அத்துடன் பாசுமதி அரிசியை நீரில் கழுவி சேர்த்து 15 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

    * இறுதியில் அதில் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து, கொதி வந்ததும் குக்கரை மூடி குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கினால், மீல் மேக்கர் பிரியாணி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த சில்லி கார்லிக் நூடுல்ஸை செய்து அவர்களை அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    நூடுல்ஸ் - அரை கப்,
    வெங்காயம் - 2
    கேரட் - 50 கிராம்
    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்
    சோயா சாஸ் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * நூடுல்ஸை வேகவைத்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கேரட், உப்பு சேர்த்துக் கிளறவும்.

    * கேரட் பாதியளவு வெந்ததும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும்.

    * எல்லாம் சேர்ந்து வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    குறிப்பு: இந்த அவசரயுகத்தில் இதை காலை நேர டிபனாக 5 நிமிடத்தில் செய்து அசத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×