என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. பேச்சிலருக்கான வெண்டைக்காய் மோர் குழம்பை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளித்த தயிர் - 1 கப்
    வெண்டைக்காய் - 10
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    வறுத்து அரைப்பதற்கு...

    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    வர மிளகாய் - 1
    தேங்காய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    செய்முறை :

    * வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * தயிரை நன்றாக கடைந்து வைத்து கொள்ளவும்.

    * வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை போட்டு, நன்கு வதங்கும் வரை வதக்கி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த, பின் தயிர் ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    * பின்பு அதில் மஞ்சள் தூள், வெண்டைக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்டாடுங்க....
    தேவையான பொருட்கள் :

    கருப்பட்டி தூள் - 1 கப்
    பச்சரிசி - 1 கப்
    பால் - 3 கப்
    தண்ணீர் - 3 கப்
    நெய் - அரை கப்
    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
    முந்திரி - தேவைக்கு
    உலர் திராட்சை - 1 தேவைக்கு
    பாதாம் - 10 (விருப்பப்பட்டால்)
    பிஸ்தா - 10 டீஸ்பூன்(விருப்பப்பட்டால்)

    செய்முறை :

    * அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

    * அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

    * மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

    * பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

    * பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

    * மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

    * அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

    * அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

    * எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

    * முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறவும்.

    * பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.

    * சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

    குறிப்பு  :

    * கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

    * நெய் அதிகம் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழிக்கறி - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2
    இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

    வறுத்து அரைக்க :

    காய்ந்த மிளகாய் - 18
    மல்லி (தனியா ) - 3 டீஸ்பூன்
    சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்

    தாளிக்க :

    பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    செய்முறை :

    * தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் சிறிதளவு எண்ணெயில் தனித்தனியாக வறுத்து, ஆற வைத்து ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

    * நாட்டுக்கோழிக்கறியை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அலசி குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்கிவையுங்கள். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

    * சிறிதளவு சிறிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்த பின் மீதமுள்ள சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிவக்க வதக்குங்கள்.

    * பிறகு அதில் தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்குங்கள்.

    * அடுத்து அதில் வறுத்து அரைத்த மசாலா, அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த கறியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்குங்கள்.

    * பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்து மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.

    * மசாலா கெட்டியானவுடன் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

    * சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த குளிர்காலத்திற்கு மாலையில் சூடாக சாப்பிட மிளகு போண்டா சூப்பராக இருக்கும். இந்த மிளகு போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுந்து ஒரு - கப்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    மிளகு - 2 டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    பல்லு பல்லாக கீறிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.



    செய்முறை :

    * மிளகை ஒன்றும் கொரகொரப்பாக உடைத்து கொள்ளவும்.

    * உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து மிக்சியில் போட்டு உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, நைஸாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கீறிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டு போட்டு வெந்ததும் போண்டாக்களாகப் பொரித்து எடுக்கவும்.

    * மாலைநேர ஸ்நாக்ஸ் மிளகு போண்டா ரெடி.

    குறிப்பு :

    * மிளகை தூள் செய்தும் போடலாம். முழு மிளகையும் போடலாம். உளுந்து அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோள மாவு - ஒரு கப்,
    ரஸ்க் தூள்  - 6 டேபிள்ஸ்பூன்,
    உருளைக்கிழங்கு - 200 கிராம்,
    கேரட் - 1
    பச்சை மிளகாய் - 3 டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - 2 சிறிதளவு
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்.
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

    செய்முறை:

    * ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கேரட்டை துருவிக் கொள்ளவும்.

    * சோள மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும் தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    * வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து, வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

    * உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும்.

    * உருட்டி வைத்த கலவையை கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மதுரை ஸ்பெஷல் பிரியாணிக்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து செய்வார்கள். இப்போது நாளை சன்டே ஸ்பெஷல் மதுரை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரகச் சம்பா அரிசி - இரண்டரை கப்
    சின்ன வெங்காயம் - ஒரு கப்
    நாட்டுத் தக்காளி (பெரியது) - 3
    பச்சை மிளகாய் - 10
    இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    தேங்காய்ப்பால் - 3 கப்
    தயிர் - அரை கப்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு - ருசிக்கேற்ப

    தாளிக்க:

    பட்டை - 2
    லவங்கம் - 2
    ஏலக்காய் - 4
    பிரிஞ்சி இலை - 1
    அன்னாசிப்பூ - 1
    கடல்பாசி - 1
    லவங்க மொட்டு - 1
    சோம்பு - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - அரை கப்
    நெய் - கால் கப்
    கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடி

    செய்முறை :


    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    * சீரகச்சம்பா அரிசியைக் கழுவி ஊறவையுங்கள்.

    * வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    * ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, நன்கு காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள்.  

    * தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் நன்றாக பொரியவேண்டும். தீயக்கூடாது, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிரியாணியின் மணமே, இந்த தாளிக்கும் பொருட்கள் நன்கு பொரிவதில்தான் இருக்கிறது.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போன வதக்கவும்.

    * அடுத்து தக்காளி, மஞ்சள்தூள், புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.

    * தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கி தொக்கு பதம் வந்தவுடன் சிக்கனை போட்டு, நன்கு வதக்குங்கள்.

    * எல்லாம் சேர்ந்து பச்சை வாசனை போக நன்கு வதங்கியதும், தயிர், உப்பு போட்டு, அதிலேயே சிக்கனை நன்கு வேகவிடுங்கள்.

    * சிக்கன் நன்கு வெந்தபின், தேங்காய்ப்பால் சேருங்கள். இதற்கு தண்ணீரே சேர்க்கக் கூடாது.

    * பால் கொதிக்கும்போது, கழுவி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசி வெந்து தண்ணீர் வற்றி மேலே வரும்போது, தட்டால் மூடி 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள்.  

    * இந்த மதுரை கோழி பிரியாணியின் மணம் ஊரையே இழுக்கும்!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுண்டைக்காய் கார குழம்பு சூப்பராக இருக்கும். பச்சை சுண்டைக்காய் சின்ன வெங்காயம் வைத்து கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை சுண்டைக்காய்,  
    சின்ன வெங்காயம் - தலா 10,
    கீறிய பச்சை மிளகாய் - 2,
    கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,
    புளி - சிறிய எலுமிச்சை அளவு,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    தக்காளி - 2,
    வேகவைத்து, மசித்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * பச்சை சுண்டைக்காயை ஒன்றிரண்டாக நசுக்கி, தயிரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    * சின்ன வெங்காயத்தை தோல் உரிக்கவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * புளியை கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

    * தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.

    * மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கிய பின்னர் ஊறவைத்த சுண்டைக்காயை தயிர் நீக்கி சேர்த்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

    * அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுது, தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

    * இப்போது புளிக்கரைசல், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு சேர்த்து, நன்றாக கொதி வந்த பின் கொத்தமல்லித்தழை தூவி, இறக்கிப் பரிமாறவும்.

    * பச்சை சுண்டைக்காய் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவருக்கும் முட்டையில் செய்த உணவுகள் பிடிக்கும். இப்போது அவித்த முட்டையை வைத்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
    புதினா -   சிறிதளவு
    மஞ்சள்தூள் -  அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    * கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை பேஸ்ட் செய்தும் போடலாம்.

    * முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.

    * அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய்/பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.

    * மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.

    * இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.

    * பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.

    * முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.

    * சூப்பரான செட்டிநாடு அவித்த முட்டை பிரை ரெடி.

    குறிப்பு :

    பச்சைமிளகாயை பேஸ்ட்டாககூட உபயோகிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சூப்பரான விரைவில் செய்யக்கூடிய தக்காளி - உருளைக்கிழங்கு கிரேவி செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 2,
    தக்காளி - 2,
    சீரகம் - கால் டீஸ்பூன்,
    சீரகத்தூள் - - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - - அரை டீஸ்பூன்,
    தனியாத்தூள் - - அரை டீஸ்பூன்,
    கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு -  தேவையான அளவு.

    செய்முறை :

    * கொத்தமல்லி, தக்காளி, உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய உருளைக்கிழங்கு, தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி, உருளைக்கிழங்கு நன்றாக வதங்கி வரும் போது அதனுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் வந்ததும் இறக்கவும்.

    * விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான தக்காளி - உருளைக்கிழங்கு கிரேவி ரெடி.

    * இது சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது சற்று காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், மசாலா மிளகாய் பஜ்ஜி செய்து, சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்
    பஜ்ஜி மிளகாய் - 6
    வெங்காயம் - 2
    வரமிளகாய் - 2
    புளி - சிறிது
    பூண்டு - 4 பல்
    அரிசி மாவு - 1/2 கப்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    சோடா உப்பு - 1 சிட்டிகை
    பெருங்காயத் தூள் - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :



    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிளகாயை இரண்டாக கீறி விதையை எடுத்து விடவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அரைத்த கலவையை கீறிய மிளகாய்களின் நடுவில் வைக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெயை சூடானதும் இதில் மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * இதேப்போல் அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும்.

    * இப்போது சூப்பரான மசாலா மிளகாய் பஜ்ஜி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கைக்காய் அவியல் செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்காய் - 5
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு…

    தேங்காய் - அரை கப்
    வரமிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிது
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு…

    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை :

    * முருங்கைக்காயை சமமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியில் முருங்கைக்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

    * அரைத்த மசாலாவை வாணலியில் உள்ள முருங்கைக்காயுடன் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

    * மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, முருங்கைக்காயுடன் சேர்த்து கிளறி இறக்கினால், முருங்கைக்காய் அவியல் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெஜிடபிள் பிரியாணியில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவையும் மணமும் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரியாணி அரிசி - 1 டம்ளர்
    பீன்ஸ், கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, நூல்கோல் எல்லாம் சேர்த்து நறுக்கிய துண்டங்கள் - 3 டம்ளர்
    நெய் - கால் கப்
    பெரிய வெங்காயம் - 2
    முந்திரிப் பருப்பு - 20
    கிராம்பு - 6
    லவங்கப்பட்டை - 6
    ஏலக்காய - 6
    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    பெரிய தேங்காய - 1/2 மூடி
    உப்பு - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை பழம் - 1
    பச்சை மிளகாய் - 2

    செய்முறை :

    * முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * அரிசியை கழுவி வைக்கவும்.

    * எலும்ச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    * கிராம்பு, பட்டை, ஏலக்காய் முதலியவைகளை பொடித்து கொள்ளவும்.

    * வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

    * அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பையும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, காய்கறிகள், பொடித்த கிராம்பு பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    * அடுத்து அதில் தேங்காய்ப் பாலும் தண்ணீருமாகச் சேர்த்து 2 1/2 டம்ளர் விட்டு, கொதிக்கும்பொழுது கழுவி வைத்த அரிசி, எலுமிச்சை சாறு, உப்பு போடவும்.

    * தீயைக் குறைத்து நிதானமாக எரியவிட வேண்டும்.

    * அரிசி நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்க வேண்டும்.

    * இதுக்கு வெங்காயத் தயிர் பச்சடி நன்கு பொருத்தமாக இருக்கும்.

    * சூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×