என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    இது ஒரு இத்தாலி நாட்டின் பிரபலமான உணவு வகை. இந்த பென்னே வித் மின்ட் பாஸ்தாவை வீட்டிலேயே எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
    பெஸ்டோ சாஸ் செய்ய :

    புதினா - 20 கிராம்
    முந்திரி/வால்நட்/ பாதாம் - 20 கிராம்
    ஆலிவ் ஆயில்/எண்ணெய் - 40 மிலி
    நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
    புராசஸ்டு சீஸ் (processed cheese) - 20 கிராம்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து தேங்காய்ச் சட்னி பதத்திற்கு அரைக்கவும். பெஸ்டோ சாஸ் ரெடி. மார்க்கெட்டில் ரெடிமேடாக கிடைக்கும் பெஸ்டோ சாஸை கூட வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

    பாஸ்தா செய்ய :

    பாஸ்தா - 200 கிராம்
    பெஸ்டோ சாஸ் (Pesto Sauce) - 50 கிராம் (தேவைப்பட்டால் அதிகரித்துக் கொள்ளவும்)
    பார்ஸ்லே(Parsley) - 5 கிராம்
    ஆலிவ் ஆயில்/எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
    துருவிய சீஸ் - 20 கிராம்
    மிளகு தூள், உப்பு - தேவைக்கு

    செய்முறை :

    * பாஸ்தாவை வேக வைத்து கொள்ளவும்.

    * பார்ஸ்லேவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுப்பில் நான்-ஸ்டிக் கடாயை வைத்து ஆலிவ் ஆயில்/ எண்ணெய் 4 டீஸ்பூன் ஊற்றி சூடானதும் அதில் பெஸ்டோ சாஸை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

    * பச்சை வாசனை போனவுடன் அதில் வேகவைத்த பாஸ்தாவைச் சேர்த்து சாஸுடன் ஒன்று சேரும் வரை வதக்கவும்.

    * அடுப்பில் இருந்து பாஸ்தாவை இறக்குவதற்கு முன்பு உப்பு, நறுக்கிய பார்ஸ்லே(Parsley), மிளகுத் தூளைச் சேர்த்து கிளறி துருவிய சீஸை மேலே தூவி இறக்கி பரிமாறவும்.

    குறிப்பு :

    * பாஸ்தாவை வேக வைக்கும்போது தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடித்து விட்டு ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கிளறி ஆறவிடவும். அப்போதுதான் பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

    * இந்த மின்ட் பெஸ்டோ பாஸ்தாவை முழு சுவையோடு வரவேண்டுமானால் ஆலிவ் ஆயிலில் சமைத்தால் மட்டுமே அதுசாத்தியம்.

    * பொதுவாக சீஸை துருவி வைத்தால் வெப்பம் காரணமாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். எனவே சீஸை நேரடியாக பாஸ்தா மீது தூவி விடுவது நல்லது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரான தயிர் வெண்டைக்காய் மசாலா செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - கால் கிலோ,
    தக்காளி - ஒன்று,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    வெங்காயம் - 2,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    தயிர் - ஒரு கப்,
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,

    செய்முறை :

    * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை  பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தயிரை நன்றாக அடித்து வைக்கவும்.

    * தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

    * வெண்டைக்காயை கழுவி துடைத்த பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும்.

    * தட்டில் கலந்து வைத்துள்ள மசாலா கலவையை கீறிய வெண்டைக் காயில் தடவவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும்.

    * கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

    * பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து... தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, அடுப்பை அணைத்து, தயிரை நன்கு அடித்து இதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.

    * ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    * சூப்பரான தயிர் வெண்டைக்காய் மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பஞ்சாபி வைபவங்களில் பன்னீர் முக்கிய இடம் பெறுகின்றது. இங்கே மிகவும் வித்தியாசமான பன்னீர் குல்சாவின் செய்முறை குறிப்பை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா அல்லது கோதுமை மாவு - 3 கப்
    சர்க்கரை - 1 தேக்கரண்டி
    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
    வெண்ணெய் - 5 டீஸ்பூன்
    பால் - 1 கப்
    உப்பு

    ஸ்டப்பிங்கிற்கு :

    பன்னீர் - 200 கிராம்
    பச்சை மிளகாய் - 4
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    சாட் மசாலா - 2 தேக்கரண்டி
    வெங்காயம் - 1

    செயல்முறை :

    * பன்னீரை துருவியது போல் நன்றாக உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.

    * ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மைதா அல்லது கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.

    * மற்றொரு பாத்திரத்தில் பால், வெண்ணெய், சர்க்கரை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து மாவில் ஊற்றி நன்கு பிசையவும். மாவு மிகவும் மென்மையாக வரும் வரை பிசையவும். அதன் பின்னர் பிசைந்து வைத்த மாவை ஒரு மென்மையான மெல்லிய ஈரத் துணி கொண்டு 40 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    * ஒரு பெரிய கிண்ணத்தில் உதிர்த்து வைத்த பன்னீர், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா போன்றவற்றை நன்கு கலந்து தனியே வைத்துக் கொள்ளவும். இப்பொழுது பன்னீர் குல்ச்சாவிற்கு தேவையான ஸ்டப்பிங் தயாராக உள்ளது.

    * ஒரு உருண்டை மாவை எடுத்து ஒரு தடித்த வட்டுவாக தேய்க்க வேண்டும். வட்டத்தை மிகப் பெரியதாக செய்ய வேண்டாம்.

    * இப்போது நீங்கள் தயாராக வைத்துள்ள ஸ்டப்பிங் பொருட்களை வட்டத்தின் நடுவில் வைத்து மாவை மூட வேண்டும்.

    * அதன் பின்னர் ஸ்டப்பிங் செய்துள்ள மாவை தேய்த்து வட்ட வடிவமாக மாற்றவும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில் ஸ்டப்பிங் செய்துள்ள பொருட்கள் வெளியே பிதுங்கி வராமல் கவனமாக தேய்க்க வேண்டும்.

    * இப்பொழுது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் குல்சாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். அடுப்பில் இருந்து குல்சாவை எடுத்த பின்னர் அதன் மீது சிறிது வெண்ணெய் தடவ வேண்டும்.

    * இப்பொழுது உங்களுக்கான பன்னீர் குல்சா பரிமாறத் தயாராக உள்ளது.

    * நீங்கள் குல்சாவை நான்கு துண்டுகளாக வெட்டி, அதை உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஜவ்வரிசி பாயாசம் சாப்பிட்டு இருப்பீர்கள். ஜவ்வரிசியோடு, கேரட் சேர்த்து பாயாசம் செய்வதால் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் (பெரியது) - 1
    ஜவ்வரிசி - 3 டேபிள்ஸ்பூன்
    பால் - 1/2 லிட்டர் (2 பெரிய டம்ளர்)
    சர்க்கரை - 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் வரை
    முந்திரிப்பருப்பு - 20
    பாதாம் - 15
    காய்ந்த திராட்சை - சிறிது
    ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    * ஜவ்வரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    * பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * 10 முந்திரி பருப்பை சிறிது பாலில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

    * கேரட்டைக் கழுவி, தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரைச் சேர்த்து வேக வைத்தெடுக்கவும்.

    * ஊறிய ஜவ்வரிசியைக் கழுவி, நீரை வடிகட்டி விட்டு, 1 அல்லது 2 கப் தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். ஜவ்வரிசி மினுமினுப்பாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.

    * மிக்ஸியில், வெந்த கேரட்டையும், ஊற வைத்துள்ள முந்திரியையும் ஊற வைத்த பாலுடன் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

    * அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, கேரட் விழுது, வெந்த ஜவ்வரிசி, சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    * மீதமுள்ள முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.

    * கடைசியில் பாதாம், ஏலக்காய்த்தூளைத் தூவிக் கலந்து, இறக்கி வைக்கவும். சூடாகவோ அல்லது குளிர வைத்தோ சாப்பிடலாம்.

    * தித்திப்பான கேரட் ஜவ்வரிசி பாயாசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்வது வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    சீரக சம்பா அரிசி - 4 கப்
    மட்டன் - அரை கிலோ
    இஞ்சி, பூண்டு - 4 ஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 4
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 4
    மிளகாய் தூள் 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    தேங்காய் - ஒரு மூடி
    தயிர் - அரை கப்
    லெமன் - 1
    புதினா - ஒரு கட்டு
    கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
    நெய் - அரை கப்
    எண்ணெய் - அரை கப்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கிராம்பு - 3
    பட்டை - 3 சிறிய துண்டு
    ஏலக்காய் - 3
    பிரிஞ்சி இலை - ஒன்று
    சோம்பு - ஒரு ஸ்பூன்

    செய்முறை :

    * மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.

    * குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப,.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

    * இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.

    * அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

    * ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.

    * பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.

    * சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த (நாளை) வருட கிறிஸ்துமஸ் விழாவைச் சிறப்பானதாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய கப் கேக் வகைகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    சர்க்கரை - கால் கிலோ
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    மைதா - 200 கிராம்
    பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்
    வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
    முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி, கோகோ பவுடர், செர்ரி - சிறிதளவு
    பேப்பர் கப் மோல்டு - தேவையான அளவு



    செய்முறை :

    * மைதாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து 3 முறை நன்றாக சலித்து வைக்கவும்.

    * சர்க்கரையைப் பொடித்துக்கொள்ளவும்.

    * பொடித்த சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும்.

    * சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக முட்டைக் கலவையுடன் சேர்த்து கட்டி விழாமல் நன்றாகக் கலந்து மூன்று பங்காகப் பிரித்து வைக்கவும்.

    * ஒரு பங்குடன் கோகோ பவுடரைக் கலக்கவும்.

    * இரண்டாவது பங்குடன் டூட்டி ஃப்ரூட்டீயைக் கலக்கவும்.

    * மூன்றாவது பங்குடன் செர்ரியைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    * பேப்பர் கப்பில் வெண்ணெய் தடவி, அதனை மோல்டினுள் வைக்கவும். அதனுள் கலந்து வைத்துள்ள மாவு கலவையை ஊற்றவும்.

    * மைக்ரோ வேவ் அவனில் 160 டிகிரி வெப்பநிலையில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

    * 7 நிமிடம் ஆனவுடன் சிறிய மரக்குச்சியை வைத்து கேக் வெந்துவிட்டதா எனப் பார்த்து, எடுக்கவும்.

    * விரும்பினால் கேக் வகைகளின் மேல் ஐசிங்கைப் பரப்பலாம்.

    * சூப்பரான கப் கேக் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. இப்போது ஃபுரூட் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற்கு பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய்தால், அதன் சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட்டால், குறைந்தது 1 வாரத்திற்காவது ஊற வைத்து செய்யுங்கள்.

    தேவையான பொருட்கள் :

    கேரமலுக்கு…

    சர்க்கரை - 1 கப்
    தண்ணீர் - 1 கப்

    கேக்கிற்கு…

    மைதா - 2 1/2 கப்
    இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
    பட்டை தூள் - 1 டீஸ்பூன்
    கிராம்பு தூள் - 1 டீஸ்பூன்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    உப்பு - 1/4 டீஸ்பூன்
    உப்பில்லாத வெண்ணெய் - 1 கப்
    நாட்டுச்சர்க்கரை - 1 1/2 கப்
    முட்டை - 5
    வென்னிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
    கேரமல் - 1 கப்
    ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் - 3 கப்
    ரம் - 5 டீஸ்பூன்



    கேரமல் செய்முறை :

    * முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சர்க்கரை கரைய வைக்க வேண்டும். குறிப்பாக இந்நிலையில் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம். சர்க்கரையானது நன்கு கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சர்க்கரை அடிப் பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.

    * சர்க்கரையானது கரைந்து பொன்னிறமான பின்னர், அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பின் கரண்டி கொண்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கி கலவையை குளிர வைக்கவேண்டும்.

    கேக் செய்முறை  :

    * முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் 2, 8×2 இன்ச் பேனில் சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.

    * அடுத்து ஒரு பௌலில் மைதா, காபி பவுடர், பேக்கிங் பவுடர், ஏலக்காய் பொடி, பட்டை தூள், கிராம்பு தூள், ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

    * பின்பு மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்த, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு 5 நிமிடம் மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

    * அடுத்து அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி நன்கு அடிக்க வேண்டும்.

    * பின் வென்னிலா எசன்ஸ் மற்றும் குளிர வைத்துள்ள கேரமல் சேர்த்து நன்கு கிளறிவிடவேண்டும்.

    * பிறகு அதில் மைதா கலவையை கட்டி சேராதவாறு கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சேர்த்து கிளறி விட வேண்டும்.

    * பின் ஊற வைத்துள்ள பழங்களை சேர்த்து கிளறி, பேக்கிங் செய்யக்கூடிய பேனில் ஊற்ற வேண்டும்.

    * இறுதியில் அதனை ஓவனில் வைத்து, 1 மணிநேரம் பேக் செய்ய வேண்டும். இவ்வளவு 1 நேரம் பேக் செய்த பின்னர், அதனை திறந்து ஒரு டூத்பிக் கொண்டு குத்தி பார்க்கும்போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் பேக் செய்ய வேண்டும்.

    * பின்னர் அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து குளிர வைத்து, பின் பேனில் இருந்து ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும்.

    * பின் கேக்கின் ஆங்காங்கு லேசான ஓட்டைகளைப் போட்டு, கேக்கின் மேல் ரம்மை தெளித்துவிட்டு, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து, 2-3 நாட்கள் கழித்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    * கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக் ரெடி.
    கிறிஸ்துமஸ் என்றதும் நினைவுக்கு வருவது கேக். இப்போது வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்ணெய் - 150 கிராம்
    சீனி - 200 கிராம்
    மைதா - 250 கிராம்
    முட்டை - 3
    பேக்கிங் பவுடர் - 1 மேசைக்கரண்டி
    கொதி நீர் - அரை கப்
    கோக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி

    செய்முறை :

    * கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்கவும்.

    * மைதாவையும், பேக்கிங் பவுடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், பொடித்த சீனியையும் போட்டு நன்கு மிருதுவான அடித்துக் கொள்ளவும்.

    * பின் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடிக்கவும்.

    * அடுத்து மைதா கலவையையும், கோக்கோ கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே கைவிடாமல் கட்டி இல்லாமல் அடிக்கவும்.

    * பின்னர் கேக் செய்யும் அதாவது கனமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும். அதன் மேலே கொஞ்சம் மைதா மாவை தூவவும். இப்படி செய்தால் கேக் ஒட்டாமல் வரும்.

    * இப்போது கேக் கலவையை அந்த பாத்திரத்தில் பாதியளவு வரும்படி ஊற்றவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் வெந்தவுடன் மேலே எழும்பி வரும்.

    * மைக்ரோ வேவ் அவனில் 160 டிகிரி C-யில்25 -35 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும்.

    * கேக் நன்கு வெந்ததும் அவனில் இருந்து எடுத்து துண்டங்கள் போடவும்.

    * கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் கேக் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் விசேஷ நாட்களில் கண்டிப்பாக இந்த அவியலை செய்வார்கள். சூப்பரான இந்த அவியலை இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்காய், கேரட், வாழைக்காய் - தலா ஒன்று, பீன்ஸ் - 5,
    சேனைக்கிழங்கு - 100 கிராம்,
    பச்சை மிளகாய் - 5,
    சீரகம் - இரண்டு டீஸ்பூன்,
    தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்),
    தயிர் - ஒரு கப்,  
    பூண்டு - 3 பல்,
    கடுகு அரை டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு,
    தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * முதலில் காய்கறிகளைக் கழுவி, ஒன்று போல் நறுக்கி, பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * தேங்காய் துருவலுடன், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * பிறகு வெந்த காய்கறிகளையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, தயிர் சேர்த்துக் கிளறவும்.

    * இப்போது சூப்பரான அவியல் ரெடி.

    * இதனை ஆப்பம், தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எல்லோர் வீட்டிலும் மைக்ரோ ஓவன் இருக்காது. ஓவன் இல்லாதவர்கள் எப்படி எளியமுறையில் கிறிஸ்துமஸ் கேக் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 1 1/2 கப்
    சூரியகாந்தி எண்ணெய் - 1/2 கப்
    ஆப்ப சோடா - 1/2 ஸ்பூன்
    பேகிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
    வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
    பால் - 1 கப்
    பொடித்த சர்க்கரை - 1 கப்
    மஞ்சள் கலர் - 1 சிட்டிகை ( விருப்பபட்டால் )
    முந்திரி - தேவைக்கு
    திராட்டை - தேவைக்கு
    பாதாம் - தேவைக்கு
    பிஸ்தா - தேவைக்கு



    செய்முறை :

    * முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, ஆப்ப சோடா, பேகிங் பவுடர், பொடித்த சர்க்கரை அனைத்தையும் சேர்த்து நன்றாக சலித்து கொள்ளவும்.

    * சலித்த மாவில் பிறகு அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், மஞ்சள் கலர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * பின் அதில் பாலை சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளலாம்.

    * குக்கரில் ஆத்து மணலை கால் பாகம் அளவு கொட்டி அடுப்பில் வைத்து சூடாக்கவும். (கண்டிப்பா மணல் தான் போட வேண்டும்)

    * பின்னர் கேக் செய்யும் அதாவது கனமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும். அதன் மேலே கொஞ்சம் மைதா மாவை தூவவும். இப்படி செய்தால் கேக் ஒட்டாமல் வரும்.

    * இப்போது கேக் கலவையை அந்த பாத்திரத்தில் பாதியளவு வரும்படி ஊற்றி அதன் மேலே திராட்டை, முந்திரி, பாதாம், பிஸ்தாவை தூவி விடவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் வெந்தவுடன் மேலே எழும்பி வரும்.

    * இப்போது குக்கரில் இந்த கேக் பாத்திரத்தை வைத்து மூடவும். விசில் போட கூடாது. குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் வளையத்தைப் போட வேண்டாம். மிதமான தீயில் 30 நிமிடம் வைத்த பின் குக்கரை அணைத்து விடவும். 10 நிமிடம் கழித்து எடுத்து, சூடாக பரிமாறவும்.

    * சூப்பரான குக்கர் கேக் ரெடி.

    * விருப்பப்பட்டால் மேலே கிரீம் தடவி பரிமாறலாம்.

    குறிப்பு  :

    கேக்கின் அளவை பொறுத்து கேக் வேகும் நேரம் சற்று மாறுபடும். ஆகையால் 25 நிமிடம் கழித்தவுடன், குக்கர் மூடியை திறந்து இட்லி வெந்து இருக்கிறா என்று பார்ப்பது போல் ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும்.

    மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது அடுப்பை அணைத்து விடலாம். இல்லா விட்டால் இன்னும் சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.

    குக்கரில் கேக் கலவைப் பாத்திரத்தை வைக்கும் முன், மணலை சற்று சூடு படுத்தி கொள்வது நல்லது. அப்போது தான் கேக் விரைவில் வேகும்.

    விசில், கேஸ்கட் இரண்டுமே போடாததால் அதிகமான பிரஷர் உள்ளே இருக்காது அதனால் safety value ஒன்றும் ஆகாது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோவைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் கோவைக்காயை இவ்வாறு வறுவல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    கோவைக்காய் - கால் கிலோ
    மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப,
    சீரகக்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * கோவைக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    * நறுக்கிய கோவைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி 15 நிமிடம் வைக்கவும்.

    * அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.

    * சூப்பரான கோவைக்காய் வறுவல் ரெடி.

    * இதை தயிர்சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    * இந்த வறுவல் செய்ய எண்ணெய் சற்று தாளாரமாக விட்டால் சூப்பரான இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அசைவம் பிடிக்காதவர்களுக்கு சிறந்த மாற்று மஷ்ரூம். இப்போது மஷ்ரூம் வைத்து எப்படி பிரியாணி செய்யலாம் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கிலோ,
    பட்டன் மஷ்ரூம்  - 400 கிராம்,
    வெங்காயம் - 250 கிராம்,
    தக்காளி - 200 கிராம்,
    இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    புதினா - 50 கிராம்,
    கொத்தமல்லித் தழை - 100 கிராம்,
    மிளகாய்த்தூள் - 20 கிராம்,
    எலுமிச்சைப் பழம் - ஒன்று,
    பூண்டு - 100 கிராம்,
    நெய் - 100 மில்லி,
    எண்ணெய் - 100 மில்லி,
    கிராம்பு, பட்டை - தலா 10 கிராம்,
    ஏலக்காய் - 5 கிராம்,
    பிரியாணி இலை - 5 கிராம்,
    தயிர் - 100 மில்லி,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளி, ப,.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மஷ்ரூமை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    * அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

    * பாதியளவு பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.

    * அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து… புதினா, தயிர், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    * அனைத்தும் நன்றாக வதங்கி கிரேவி பதம் வந்த பிறகு, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

    * கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊறவைத்த அரிசியைப் போட்டு வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், மஷ்ரூம் சேர்த்துக் கிளறவும்.

    * பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, அதன்மீது பிரியாணி இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிமிடம் கழித்து இறக்கும்போது, நெய் சேர்த்துக் கிளறி, சிறிதளவு வறுத்த வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.

    * சூப்பரான மஷ்ரூம் பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×