என் மலர்tooltip icon

    சமையல்

    • பச்சை மிளகாயை நறுக்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவிக்கொண்டால் எரிச்சல் ஏற்படாது.
    • கேரட் அல்வா செய்யும் போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால் கோவா சேர்த்தால் பிரமாதமான சுவை கிடைக்கும்.

    * கீரைக்கூட்டுக்கு தேங்காய் அரைத்து செய்வதற்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தால் ருசி கூடும்.

    * பருப்பு அடைக்கு தேங்காய் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கை சேர்த்து அடை சுட்டால் மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * தேங்காய் பர்பி செய்யும் போது 2 டீஸ்பூன் ராகி மால்ட் சேர்த்தால் சுவை கூடும்.



    * தேங்காயை உடைத்து முதலில் கண் உள்ள பாகத்தை உபயோகிக்க வேண்டும், அந்தப் பகுதி தான் விரைவில் கெட்டுப்போகும்.

    * பச்சை மிளகாயை நறுக்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவிக்கொண்டால் எரிச்சல் ஏற்படாது.

    * கோதுமை அல்வா செய்யும் போது நீர்த்து விட்டால் சிறிதளவு சோள மாவை கரைத்துச் சேர்க்கலாம். அல்வா கெட்டிப்படுவதுடன் சுவையும் அதிகரிக்கும்.

    * பாகற்காய் குழம்பு செய்யும் போது நான்கு துண்டுகள் மாங்காய் சேர்த்தால் கசப்பு தெரியாது.

    * கேரட் அல்வா செய்யும் போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால் கோவா சேர்த்தால் பிரமாதமான சுவை கிடைக்கும்.

    * எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு டீஸ்பூன் அவலை பொடி செய்து சூப்பில் சேர்த்துக் கொதிக்க விட்டால் சூப் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * வற்றல் குழம்பு செய்யும் போது கடைசியாக வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டால் குழம்பு ஜோராக இருக்கும்.

    * தயிர் வடை செய்ய உளுந்துடன் ஐந்தாறு முந்திரிப் பருப்புகளையும் ஊற வைத்து அரைத்தால் வடைகள் மெத்தென்று இருப்பதுடன் ருசியும் அருமையாக இருக்கும்.

    • தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.
    • மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

    * அடை மாவு புளித்து விட்டால் இட்லி தட்டில் இட்லி போல் மாவை ஊற்றி 7 நிமிடம் வேக வைத்து பின்பு அதை உதிர்த்து கடுகு, மஞ்சள் தூள், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து சிறிது உப்பு போட்டு வாணலியில் வறுக்க சூப்பர் அடை காரபுட்டு ரெடி.

    * பலகாரம் செய்ய எண்ணெயை கொதிக்க வைக்கும்போது சிறிது இஞ்சியை அம்மியில் அல்லது மிக்சியில் நசுக்கிப் போட்டு உபயோகித்தால் பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது. பொங்கியும் வழியாது. எண்ணெய் புகையில் வாந்தி தலை, சுற்றல் வராது.

    * வாழைக்காய், கோவைக்காய் போன்ற காய்கறிகளை சிறிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் சத்தம் வந்ததும் எடுத்து பொரியல் செய்தால் எண்ணெய் அதிகம் விட வேண்டாம்.

    * தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.

    * வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அது காய்ந்ததும் பஜ்ஜி செய்தால் வாசனையாக இருக்கும்.

    * பிடி கொழுக்கட்டை செய்யும்போது கொதிக்கும் நீரில் கேரட், பீன்ஸ், பட்டாணி இவைகளையும் வேக வைத்து அரிசி மாவை சேர்த்து வெஜிடபிள் கொழுக்கட்டை செய்யலாம்.

    * கோவைக்காயை கொதிநீரில் கொட்டி 5 நிமிடம் கழித்து வடிகட்டி உப்பு, பச்சை மிளகாய் அரைத்துப்போட்டு புளித்த தயிர் கடைந்து கிளறி ஒரு நாள் ஊறவைத்து காய போட்டால் கோவைக்காய் வற்றல் ரெடி.

    * முருங்கை பூவை தேங்காய் எண்ணெயில் பொன்நிறமாக வறுத்து மோர் குழம்பில் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும், வாசம் சூப்பராக இருக்கும்.

    * மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

    * வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கல் பாயசத்திற்கு கொஞ்சம் வெல்லம் குறைவாகப் போட்டு கடைசியில் சர்க்கரையை கொஞ்சம் சேர்க்க சுவை கூடும்.

    * கூட்டு, குழம்பு இவற்றிற்கு அரிசி மாவு கரைத்து விடுவதற்கு பதிலாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து விட்டால் சீக்கிரம் கெட்டுப்போகாது, கெட்டியாகவும் இருக்கும்.

    • எந்த வகையான இனிப்பு பலகாரம் செய்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது சிறிது தேன் கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
    • பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.

    * பக்கோடா, வடை முதலியவை செய்யும் பொழுது சிறிது சோம்பு அதிகமாக சேர்த்தால் ருசி தூக்கலாக இருக்கும்.

    * வெங்காயம் வதக்கும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் வெங்காயம் நன்கு வதங்கும். சர்க்கரை வெங்காயத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மென்மைப்படுத்தும்.

    * எந்த வகையான இனிப்பு பலகாரம் செய்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது சிறிது தேன் கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.

    * பால்கோவா செய்யும்போது இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை துணியில் கட்டி பாலில் வைத்தால் பால்கோவாவின் நிறம் கிரீம் போல் கிடைக்கும்.

    * இரண்டு ஐஸ் கட்டிகள் மற்றும் கல் உப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பிளேடு கூர்மையாக மாறும்.

    * பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.

    * இட்லிக்கு மாவு அரைக்கும்போது சிறிது பழைய சாதம் மற்றும் அவல் சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.

    * சேமியா பாயசம் செய்யும்போது சேமியா குழைந்து விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்தால் சேமியா தனித்தனியாக பிரிந்து விடும்.

    * எண்ணெய் பலகாரங்களை வைக்கும் டப்பாவில் உப்பை ஒரு துணியில் முடிச்சு போட்டு வைத்தால் காரல் வாடை வராது. நீண்ட நாட்களுக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

    * தேங்காயை தண்ணீரில் நனைத்து உடைத்தால் தேங்காய் சரிபாதியாக உடையும்.

    * சப்பாத்திக்கு மாவு பிசையும்பொழுது சிறிது வெதுவெதுப்பான நீர் மற்றும் பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும்.

    * தயிர் மிகவும் புளித்து விட்டால் ஒரு டம்ளர் நீர் ஊற்றி 10 நிமிடம் கழித்து அந்த நீரை வடித்து விட்டால், புளிப்பு நீருடன் சென்று விடும். புளிப்பில்லாத தயிர் கிடைக்கும்.

    * மீன் குழம்பு செய்யும்போது சிறிது கடுகை வறுத்து அரைத்து மீனில் தடவி ஐந்து நிமிடம் கழித்து குழம்பில் சேர்த்தால் மீன் உடைந்து போகாது.

    • வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டிவைத்துக் கொள்ளவும்.
    • தர்பூசணி காய் நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    தர்பூசணி கீற்று -3

    பாசிப் பருப்பு - 100 கிராம்

    சிறிய வெங்காயம் - 4

    தேங்காய் - 1/2 மூடி

    பச்சை மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    கடுகு - சிறிதளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கடலை எண்ணெய்- சிறிதளவு

    உப்பு தேவையான அளவு

    செய்முறை:

    தர்பூசணி கீற்றுகளின் பழுத்த பகுதிகளை நீக்கி விட்டு, பச்சைப்பகுதிகளை சீவி விட்டு இடைப்பட்ட சதைப்பகுதிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டிவைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை ஊறவைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை உருவிவைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    அத்துடன், வெட்டி வைத்துள்ள தர்பூசணித் துண்டுகள், ஊற வைத்துள்ள பாசிப்பருப்பு, மஞ் சள்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.

    தர்பூசணி காய் நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    தர்பூசணி பாசிப்பருப்பு கூட்டு தயார். சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    • சப்பாத்தி மீதமானால் ஈரத்துணி சுற்றி வைத்தால் பதமாக இருக்கும்.
    • ஒரு கப் அவல், ஒரு கைப்பிடி பச்சரிசி, உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து செட் தோசை செய்யலாம்.

    * இட்லிப்பொடி தயாரிக்கும்போது சிறிது கறிவேப்பில்லையை வறுத்து அரைத்து சேர்த்தால் மணமாகவும், பித்தத்தை போக்கவும் உதவும்.

    * பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி மென்மையாக மாறும்.

    * சப்பாத்தி மீதமானால் ஈரத்துணி சுற்றி வைத்தால் பதமாக இருக்கும்.

    * தோசைமாவு குறைவாக இருந்தால், அந்த அளவிற்கு அரிசி மாவு, தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நீர் விட்டு சிறிது நேரம் கழித்து ஆப்பம் ஊற்றலாம்.

    * ஒரு கப் அவல், ஒரு கைப்பிடி பச்சரிசி, உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து செட் தோசை செய்யலாம்.

    * இட்லி மாவு அரைக்கும்போது சிறிது ஐஸ்வாட்டர் ஊற்ற இட்லி பஞ்சு போல் மிருதுவாக வரும்.

    * பீர்க்கங்காயுடன் தக்காளி, வரமிளகாய், வெங்காயம், வதக்கி சட்னி செய்தால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.

    * மீதமான அப்பளம் இருந்தால், அத்துடன் தேங்காய், கருவேப்பிலை, புளி, உப்பு, பச்சை மிளகாய் வறுத்து சேர்த்து அரைக்க அப்பள துவையல் ரெடி. மாறுபட்ட சுவையை கொண்டிருக்கும்.

    • இஞ்சி-பூண்டு விழுது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, அதில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் கலந்து பிரிட்ஜில் வைக்கலாம்.
    • மீன் பொரிக்கும்போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க, அதில் சிறிது அரிசி மாவு அல்லது ரவை தடவலாம்.

    * வெங்காயத்தை வெட்டும்போது கண்களில் நீர் வராமல் இருக்க, அதை 10 நிமிடம் பிரிட்ஜில் வைத்து வெட்டுங்கள்.

    * மிளகாய் தூள் அதிகமாகிவிட்டால், சிறிது தயிர் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் காரம் சமநிலையாகும்.

    * தயிரை விரைவாக தயார் செய்ய, அதில் ஒரு மிளகாய் சேர்த்து வைத்தால் சீக்கிரம் பதனமடையும்.

    * சமையல் மேசையில் எறும்புகள் வராமல் இருக்க, சிறிது எலுமிச்சைச்சாறு தடவலாம்.

    * பாத்திரங்களில் எண்ணெய் ஒட்டாமல் கழுவ, சோப்புடன் சிறிது உப்பு கலந்து தேய்த்தால் பாத்திரங்கள் பளிச்சிடும்.

    * இஞ்சி-பூண்டு விழுது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, அதில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் கலந்து பிரிட்ஜில் வைக்கலாம்.

    * தோசை மாவு விரைவாக புளிக்க, அதை குளிர்ச்சியான இடத்தில் வைக்காமல், லேசான சூடான இடத்தில் வைக்கவும்.

    * மோருடன் சிறிது இஞ்சி விழுது சேர்த்தால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

    * தக்காளி பச்சை நிறத்தில் இருந்தால், அவற்றை அரிசி இருக்கும் டப்பாவில் வைத்தால் விரைவில் சிவப்பு நிறமாகும்.

    * ஆட்டிறைச்சி மென்மையாக இருக்க, அதை பப்பாளி விழுது அல்லது தயிரில் ஊறவைத்து சமைக்கவும்.

    * மீன் பொரிக்கும்போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க, அதில் சிறிது அரிசி மாவு அல்லது ரவை தடவலாம்.

    * சூப் மிகவும் ருசியாக இருக்க, கடைசியாக சிறிது பட்டாணி மாவு அல்லது முந்திரி விழுது சேர்க்கலாம்.

    * பிரியாணியில் தனித்துவமான மணம் வர, இறுதியாக ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

    * தேன் நீண்ட நாட்கள் `பிரஷ்'ஆக இருக்க, அதை ஒளி புகாத இடத்தில் கண்ணாடி பாட்டிலில் வைப்பது நல்லது.

    • பால் பொங்கினால் டம்ளரில் சிறிது தண்ணீரை எடுத்து ஊற்றினால் பொங்குவது அடங்கி விடும்.
    • ரசம் கொதித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்க்கத் தேவை இல்லை.

    * தேநீர் தயாரிக்கும் போது சர்க்கரையையும், டீத்தூளையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையில் அசடுகள் இருக்க வாய்ப்புண்டு.

    * தோசைக்கல்லில் சப்பாத்தியை போட்டதும் எவர் சில்வர் கிண்ணத்தில் சுடுநீரை ஊற்றி சப்பாத்தி மீது வைத்து மெதுவாக அழுத்தினால் சப்பாத்தி பொன் நிறமாக மாறும். சீக்கிரமே வெந்தும் விடும். சில்வர் கிண்ணத்தின் அடிப்புறம் தட்டையாகவும் சாப்பாத்தி அளவுக்கு வட்ட வடிவமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

    * கல் உப்பை பாட்டிலில் போட்டு நீர் ஊற்றி கலக்கி, அந்த தண்ணீரை வடித்து விட்டால் உப்பு சுத்தமாகி விடும். மணல் போன்ற தூசிகள் அடியில் தேங்கி விடும். மீண்டும் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்தால் மேலே தென்படும் தெளிந்த நீரை சமையலுக்குப் பயன்படுத்தலாம். அந்த உப்பு நீரை சமையலுக்குப் பயன்படுத்தும்போது ஒரு கரண்டியில் ஊற்ற வேண்டும். தூசி ஏதும் இருந்தால் எடுத்தும் விடலாம்.

    * சமையல் அறையில் ஒரு நோட்டும், பேனாவும் வைத்துக் கொண்டால் மளிகைப் பொருட்கள் முடியும் தருவாயில் அவற்றை குறித்து வைத்துக்கொள்ளலாம். பின்பு கடையில் பொருள் வாங்கும் போது யோசித்து குழம்ப வேண்டாம். இந்தக் குறிப்புகள் பயன்படும்.

    * இடுக்கிகள் இல்லாத போது, அடுப்புத் துணிக்கு நூல் துணியைப் பயன்படுத்த வேண்டும். நைலான் துணிகளில் தீப்பற்றினால் அணைப்பதுசிரமம். காலால் தேய்த்தால் நைலான் இழைகள் நெருப்புடன் பாதத்தில் ஒட்டிக்கொள்ளும். காய்கறிகள் கழுவிய தண்ணீர் வைத்துள்ள வாளியில் தீப்பிடித்த துணியைப் போடலாம். பதற்றமே தேவை இல்லை.

    * பால் பொங்கினால் டம்ளரில் சிறிது தண்ணீரை எடுத்து ஊற்றினால் பொங்குவது அடங்கி விடும்.

    * மின் அடுப்பை பயன்படுத்தும்போது அடுப்பை அணைக்காமல் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது. அடுப்பை அணைத்த பின் மின் இணைப்பை துண்டிக்கும் வழக்கத்தை பின்பற்றினால் அடுப்பு நீடித்து உழைக்கும்.

    * ரசம் கொதித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்க்கத் தேவை இல்லை. ரசம் கொதித்து விட்டால், மூடி, கை தாங்க முடியாத அளவுக்கு சூடாகியிருக்கும். இதைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்.

    • தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
    • வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.

    * இஞ்சிபூண்டு அரைக்கும் பொழுது சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.

    * வாழைப்பூ நறுக்கும்போது உப்புக்கலந்த தண்ணீரில் வாழைப்பூவை வெட்டிப்போட்டால் வாழைப்பூ கறுத்து போகாமல் இருக்கும்.

    * கடல் பாசி காய்ச்சும்போது இறுதியாக சில சொட்டு எலுமிச்சை பழச்சாறு ஊற்றினால் கடல் பாசி கண்ணாடி போல தெளிவாக இருக்கும்.

    * அசைவ இறைச்சிகள் கழுவும் போது உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கழுவினால் வாடை வராமல் இருக்கும்.

    * ஸ்வீட் வகைகள் செய்யும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொண்டால் இனிப்பு தூக்கலாக தெரியும்.

    * தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

    * துவரம் பருப்பை வேகவைக்கும் பொழுது தண்ணீரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வேக வைத்தால் பொங்காது.

    * பருப்புக் குழம்பில் இறுதியாக வெங்காயத்தை நெய்யில் தாளித்து ஊற்றினால் சுவை அதிகரிக்கும். நன்கு வாசனையாக இருக்கும்.

    * வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.

    * தேங்காய்ப் பாலில் பொட்டுக்கடலையை பொடி செய்து சேர்த்து உப்பு சேர்த்து தாளித்து இறக்கினால் அவசர சட்னி ரெடி.

    * சாதம் மஞ்சளாக இருந்தால் சாதம் வடிக்கும் நேரத்தில் ஒரு துண்டு புளியை சேர்த்து பிறகு வடித்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.

    * மாவில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொதித்தவுடன் இட்லி ஊற்றினால் இட்லி பஞ்சு போல இருக்கும்.

    • உலக சுகாதர அமைப்பு (WHO) ஒரு வரையறையை வெளியிட்டுள்ளது.
    • ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

    முறையற்ற உணவுகள் ஆட்சி செலுத்தும் ஒரு காலகட்டத்தில் ஆரோக்கியமான ஒரு உணவு முறையோ எவ்வாறு இருக்க வேண்டும் என உலக சுகாதர அமைப்பு (WHO) ஒரு வரையறையை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஆரோக்கியமான உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் முழு தானியங்கள் இருக்க வேண்டும்.

    வயது வந்த நபர் ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து பகுதிகளாக பழங்கள் மற்றும் காய்கறிகளை (400 கிராம்) சாப்பிட வேண்டும்.

    ஒரு நாளைக்கு சர்க்கரையை 50 கிராமுக்கும், கொழுப்புகளை 30%-க்கும் குறைவாகவும், அயோடின் கலந்த உப்பு தினமும் 5 கிராமுக்கு குறைவாகவும் உட்கொள்வதை உறுதி செய்தலே பல நன்மைகள் ஏற்படும். இந்த முறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தொற்றா நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. 

    • சட்னி தயார் செய்யும்போது புளிக்கு பதில் தோல் சீவிய மாங்காய் சேர்க்கலாம்.
    • அடைக்கு மாவு அரைக்கும்போது பரங்கிக்காய் சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல இருக்கும்.

    * பிரெட்டை முக்கோண வடிவில் டோஸ்ட் செய்து தாளித்த தயிரை அதன் மேல் ஊற்றினால் பிரெட் தயிர் வடை ரெடி.

    * காலி பிளவர், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஏலக்காய், சோம்பு, கிராம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த கலவை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். இந்த காலிபிளவர் சட்னி, இட்லி, சப்பாத்திக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

    * தோசை மாவு அரைக்கும்போது கொஞ்சம் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால், தோசை பளபளவென்று மெல்லியதாக வரும்.

    * இட்லிக்கு சட்னி தயார் செய்யும்போது புளிக்கு பதில் தோல் சீவிய மாங்காய்த்துண்டை சேர்த்து அரைத்தால் சட்னியின் சுவை பிரமாதமாக இருக்கும்.

    * ஒரு கரண்டி நெய்யை அடுப்பில் வைத்து காய்ச்சி அதை பஜ்ஜி மாவோடு கலந்து பஜ்ஜி செய்தால், பஜ்ஜி வாசனையாக இருக்கும்.

    * ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதை தவிர்க்கலாம்.

    * மீன்களை எண்ணெய்யில் பொரிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவும். இதை தவிர்க்க மீன்களைப் பொரிக்கும்போது அடுப்பின் அருகில் பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.

    * மீன் பாத்திரத்தில் மீன் வாசம் இருந்தால் சீயக்காய்த்தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை துலக்கினால் மீன் வாசம் போய்விடும்.

    * ரவா தோசை தயாரிக்கும்போது இரவே ரவையை தண்ணீரில் கரைத்து வைக்கவும். மறுநாள் காலை தோசை வார்ப்பதற்குமுன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை சிவப்பாக மொறுமொறுவென இருக்கும்.

    * பன்னீர் துண்டுகளை ஒரு டப்பாவில் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து உடன் ஒரு ஸ்பூன் வினிகரை ஊற்றி மூடி பிரிட்ஜில் வைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

    * வெள்ளை உளுந்தை வறுத்து விழுதாக அரைத்து தக்காளி சட்னியுடன் சேர்த்தால் சட்னி கம கம வாசனையாக இருக்கும்.

    * முந்திரி, பாதாம், கசகசா போன்றவைகளை அரைப்பதற்கு முன்பு ஊற வைத்து பிரிட்ஜில் வைத்து அரைத்தால் விரைவில் அரைபடும்.

    * அடைக்கு அரைக்கும்போது ஒரு கீற்று பரங்கிக்காயைச் சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல இருக்கும்.

    * அரிசி கொதிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி தூவினால், உலை நீர் கொதித்து வெளியே வழியாது.

    • உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக்கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
    • வர மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கவும்.

    * இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகி விட்டால், அதனுடன் ஊற வைத்த ரவை சிறிது சேர்த்து விட்டால், இட்லி மிருதுவாகவும், ரவா இட்லி போலவும் இருக்கும்.

    * சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

    * கோதுமை அல்வா செய்யும் போது, வெந்நீர் தெளித்து, நெய் கலந்து கிளறினால், அல்வா சுவையும், மணமும் கூடும்.

    * அதிரச மாவை கலந்த பின், வரும் கட்டியைத் தட்டை முறுக்கு, தேன்குழல் மாவில் கலந்தால் கர கர, மொறு மொறுவென்று இருக்கும்.

    * பால் காய்ச்சும்போது சில ஏலக்காய்களைப் போட்டால், பால் நீண்ட நேரம் புளிக்காலும், மணமாகவும் இருக்கும்.

    * சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

    * உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக்கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

    * வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயைக்காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

    * தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

    * வர மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கவும்.

    • பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
    • கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * முட்டையை வேக வைத்த பிறகு அதன் ஓடு லேசாக வெடிக்கும் வரை அடித்து சிறிது நேரம் குளிர்ந்த நீரில் மூழ்கடிக்க வேண்டும். அதன் பிறகு, முட்டையை எளிதில் உடைக்க இயலும். முட்டை கொதிக்கும் போது ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் சேர்த்தால் ஓடு எளிதில் வெளியேற உதவும்.

    * கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, சிறிது எண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக கலக்கவும். பின்னர், மாவில் மிளகாயை முக்கி, சூடான எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். இவ்வாறு செய்தால் பஜ்ஜி மொறுமொறுப்பாக இருக்கும்.

    * வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை வட்டமாக வெட்டிய பின், தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும். பஜ்ஜி செய்யும் போது மாவுடன் மைதா சேர்த்தால் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

    * பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.

    * பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.

    * மிளகாய்த்தூள் கெட்டுப்போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காய கட்டியை போட்டு வைத்தால் போதும். நீண்ட நாள் காரம் மணம் மாறாமல் இருக்கும்.

    * வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க முறுமுறுப்பாக இருக்கும். எண்ணெய் தேவை குறைவாகும்.

    * கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * மீன் குழம்பு தயாரிக்கும் போது வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து குழம்பில் சிறிது போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

    * உள்ளங்கையில் சமையல் எண்ணெய் சில சொட்டு ஊற்றி தேய்த்து மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் வாடை பிடிக்காது.

    * மிளகு ரசத்திற்கு குழைய வைத்து வேக வைத்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

    ×