search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
    X
    ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

    சத்து நிறைந்த ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

    ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 2 கப்
    ரவை - அரை கப்
    கடலைமாவு - அரை கப்
    மோர் - 3 கப்
    கேரட் - 1
    முட்டைகோஸ் - சிறிய துண்டு
    குடைமிளகாய் - பாதி
    தேங்காய்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    முந்திரிப்பருப்பு(பொடித்தது) - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    முட்டைகோஸ், குடைமிளகாய பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸையும், ரவையையும் ஒன்றாக வறுத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    பிறகு கடலை மாவை பச்சை வாசனை போகும்வரை வறுத்துக் கொள்ளவும்.

    மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு மூன்றையும் பொடித்துக் கொள்ளவும்.

    பிறகு வறுத்த மாவு கலவைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு போட்டு ஒன்றாகக் கலக்கவும்.

    பிறகு அதனுடன் மோர் விட்டு கரைத்து, அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு ஆகிய மூன்றையும் போடவும்.

    பிறகு கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்த்துருவல் ஆகிய அனைத்தையும் மாவுடன் கலக்கவும்.

    பிறகு ஊத்தாப்பம் பதத்திற்கு கரைத்து, கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தடியான ஊத்தப்பமாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் ரெடி.
    Next Story
    ×