search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    அவல் புளியோதரை
    X
    அவல் புளியோதரை

    உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் அவல் புளியோதரை

    காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். வெள்ளை நிறத்தில் இருக்கும் அவலில் உடலுக்கு தேவைப்படும் கார்போ ஹைட்ரேட், கலோரி உள்ளது.
    தேவையான பொருட்கள்

    கெட்டி அவல் - 1 கப்,
    உப்பு - தேவைக்கு,
    புளிக்கரைசல் - 1/2 கப்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    துருவிய வெல்லம் - 1 டீஸ்பூன்.

    தாளிக்க

    நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    வரமிளகாய் -
    பச்சை மிளகாய் - 1,
    கறிவேப்பிலை - 6 இதழ்கள்,
    கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
    வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,
    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்.

    செய்முறை

    அவலைக் கழுவி நீரை வடிகட்டி அரைமணி நேரம் மூடி வைக்கவும்.

    இடையிடையே திறந்து கைகளால் நன்றாகக் கலந்துவிடவும்.

    வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து புளிக்கரைசல் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதித்து எல்லாம் சேர்ந்து வந்ததும் ஊறிய அவலைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

    அவல் புளியோதரை தயார்.
    Next Story
    ×