search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மல்டி கீரை சூப்
    X
    மல்டி கீரை சூப்

    சத்தான 4 வகையான கீரை சேர்த்த சூப்

    கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சூப்பில் பல கீரைகளை சேர்ப்பதால், அதன் அனைத்து சத்துக்களும் முழுமையாக குழந்தைகளுக்கு கிடைக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கைப்பிடி
    பொடியாக நறுக்கிய சிறுகீரை - ஒரு கைப்பிடி
    பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - ஒரு கைப்பிடி
    பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
    சோள மாவு - 2 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
    வெண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    முதலில் சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முளைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.

    கீரை நன்கு வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் கரைத்து வைத்த சோள மாவை ஊற்றி கொதிக்கவிட்டு, வெண்ணெய் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சத்தான மல்டி கீரை சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×